புதுடில்லி, ஏப்.20- இந்திய அரசியல் சாசனம் போன்ற ஜனநாயகக் கட்ட மைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வி.னருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர் களுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்து காட்சிப் பதிவு வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும் வயநாடு தொகுதியின் மக் களவை உறுப்பினருமான ராகுல் காந்தி காட்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த காட்சிப் பதிவில் ராகுல் காந்தி பேசியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் முதுகெலும் பாகவும், டி.என்.ஏ.வாகவும் தொண்டர் கள் உள்ளனர். நமது சிந்தனைகளையும் கொள்கைகளையும் நிலை நிறுத்த நாள்தோறும் போராடி கொண்டிருக் கிறோம்.
நீங்கள் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது. தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் சிந்தனைகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பாஜ உள்ளது.
அவர்கள் இந்திய அரசமைப்பு உள்ளிட்ட ஜனநாயக கட்டமைப்பு களின் மீது தாக்குதல் நடத்தி வரு கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வி.னர் சிதைத்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வி.ன் சித்தாந் தங்களுக்கு எதிராக தெருக்கள், வீதிகள் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் நாம் இறங்கிப் போராட வேண்டும். அதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்தத் தயாராக வேண்டும்.
இந்திய ஜனநாயகக் கட்டமைப்பு களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் நீங்கள் (தொண்டர்கள்) தான். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங் கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அது புரட்சிகரமாகவும் ஏழை எளிய மக்களின் நலனை பாதுகாப்பதாகவும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம் தொண்டர்கள் தான். நீங்கள் அளித்த கருத்துகள் மற்றும் வழிமுறைகள்தான் இந்த தேர்தல் அறிக்கை சிறப்பாக அமைய காரணம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள் ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள மேலும் ஒரு காட்சிப் பதிவில் ராகுல் காந்தி பேசுகையில்,’ இந்தியாவில் இருக் கும் நீர், காடு, நிலம் ஆகியவற்றை பாது காப்பது மட்டும் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் அல்ல.
நவீன இந்தியாவைக் கட்டியெழுப்பு வதில் பழங்குடியினரின் பங்களிப்பை உறுதி செய்வதும் காங்கிரசின் இலக்கு தான். பழங்குடியின மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நமது இந்த 6 தீர்மானங்கள், மக்களின் உரிமைகளுக் கான கேடயமாக மாறும். பழங்குடியின சமூகத்தின் வளங்களைக் கொள்ளை யடிப்பதைத் தடுப்பதன் மூலம், அடித் தளம் வலுப்பெறும். அப்போதுதான் நாடு வலுப்பெறும்,’ என்று கூறினார்.