சென்னை, ஏப். 13- தேனி மாவட்டத்திற்குதேர்தல் பிரச்சாரத் திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ம.க. மாநில துணைத் தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க. மேனாள் வேட்பாளர் ஜோதி முத்து. தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் வேல்முருகன். திண்டுக்கல் ஆரிய வைசிய சபா தலைவர் சிறீதர், பழனி அடிவார வர்த்தகர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் செல்வகுமார், தலைவர் சந்திரசேகரன், பொன் அமராவதி வர்த்தக சபை தலைவர் பழனியப்பன். தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை மாவட்ட தலைவர் பாலகுருசாமி, சிம்மக்கல் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் வினோத்குமார், தமிழ் நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத் தலைவர் பீட்டர் உள்பட பல்வேறு அமைப்பினர் நேரில் சந்தித்து இந்திய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப் பின் போது. தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், அமைச் சருமான திண்டுக்கல் அய்.பெரியசாமி. அமைச்சர்கள் சக் கரபாணி, ரகுபதி, தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் என். ராமகிருஷ் ணன், தேனிதொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் உடன் இருந்தனர்.
இந்தியா கூட்டணிக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books