பெண்களுக்கு சொத்துரிமையைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் தான்! அப்போது இந்தியாவில் வேறு மாநிலம் எதிலும் இல்லாத சாதனை இது! ஒன்றிய அரசில் பெண்களுக்கு 33 விழுக்காடு கொடுக்க வேண் டும் என்றார்கள். கொடுத்தார்களா? இல்லை, கொடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பேரூராட்சித் தலைவராக; ஒரு நகராட்சித் தலைவராக; ஒரு மாநகராட்சி மேயராக பெண்களும் வரலாம் என்கின்ற நிலையை; மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பை; 33 விழுக்காடு ஒதுக் கீட்டை வழங்கியவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். கடலூரில் ஒரு பெண் மேயராகி இருக்காங்க. இதற்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் பழ வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அந்தப் பெண் இன்றைக்கு மேயர்! அவர்கள் மேயர் உடையுடன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஆண் செங்கோல் போன்ற ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்த தும், ’அடடா… நமது தலைவர் தந்தை பெரியார் கண்ட கனவை இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறாரே’ என்று வியந்து போனேன். அதற்குப் பிறகு பெண்களுக்கு பணியிடங் களில் 30 விழுக்காடு ஒதுக்கீடு! ஏழைகளுக்கு எரிவாயு வோடு கூடிய அடுப்பு கலைஞர் கொடுத்தார். இன்றைக்கு வரைக் கும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைக் காட்சிப் பெட்டியை கலைஞர் என்றைக்குக் கொடுத்தார். இன்றைக்கும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட மக்கள் நல அரசை நடத்திய ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி! பெண்கள் சுயசார்போடு இயங்குவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் கொண்டு வந்த ஆட்சி தி.மு.க. ஆட்சி! இப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி டில்லியில் அதிகாரத்தில் அமர வேண்டும். அதற்கு ஆ. ராசா வெற்றி பெற வேண்டும்.
சிலரது பெயருக்கும் அவர்கள் குணத்திற்கும் தொடர்பு இருக்காது. ஆனால், நமது வேட்பாளருக்கு ’ராசா’ என்று அவரது பெற்றோர் பெயர் வைத்திருக் கிறார்கள். உண்மையிலேயே ஆளுமைத் திறமை உள்ள ராசாவாக; நிர்வாகத் திறமை உள்ள ராசாவாக; ஏழை எளிய மக்கள் பால் அக்கறை உள்ள ராசாவாக; ஒடுக்கப் பட்ட மக்களுக்காக தன்னை ஒப்படைத்துக் கொள்ளக் கூடிய ராசாவாக; அனைவருக்கும் அனைத்தும் கிடைக் கச் செய்வதில் உறுதியுள்ள ராசாவாக; எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத ராசாவாக; யாருக்கும் அஞ்சாத ராசாவாக; எங்கள் வீட்டுப் பிள்ளை ராசாவாக; கலைஞர், ஆசிரியர் அவர்களுடைய அருமை மாணவர் ராசாவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அருமையான ஒருவர்தான் உங்கள் வேட்பாளர். இந்தியா விலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் ராசா; நமது ராசா வெற்றி பெற்றார் என்கின்ற நிலையை நீங்கள் வழங்குங்கள் என்று கேட்பதற்குத் தான் எங்கள் தலைவர்; 91 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் வந்திருக்கிறார் கள். அவரது உரையைக்கேட்டு ஆ.ராசாவை வெற்றி பெற வையுங்கள்.
– (பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், 7.4.2024, கோத்தகிரி)