பெரம்பலூர், ஏப்.8 – சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கூட் டணி கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன் றியத்தில் உள்ள கொளக்கா நத்தம், காரை, தெரணி, புதுக் குறிச்சி, மலையப்ப நகர் உள்ளிட்ட கிராமங் களில் பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசி யதாவது:-
மக்கள் விரோத பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்ப டுத்த வேண்டும். தற்போது நடை பெறும் மக்களவை தேர்தல் இரண்டாம் சுதந்திர போர். முத லாவது சுதந்திர போர் ஆங்கிலேயரை எதிர்த்து காந்தியார் தலைமை யில் நடைபெற்றது. தற்போது கொடிய சக்திகளான மோடி, அமித்ஷா, அம்பானி, அதானி ஆகிய சங் பரிவார் கும்பலை எதிர்த்து நடைபெறுவது இரண்டாம் சுதந்திரப் போர்.
தற்போது அரசியல் எதிரிக ளாக அ.தி.மு.க.வையோ, பா.ம.க. வையோ முன்னிறுத்தி விமர்சனம் செய்யவில்லை. மக்களின், எதிரி யான பா.ஜ.க.வினை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தியாக வேண் டும். ஒன்றியத்தில் ஆளுங்கட்சி யாக உள்ள பா.ஜ.க.வோடு தி.மு.க. இணக்கமாக இருந்திருந்தால் எந்தவித நெருக்கடியும் வந்து இருக்காது. அமைச்சர்கள் மீது எவ்வித வழக்குகளும் பாய்ந்திருக் காது. ஆனால் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோ ரின் சமூக நீதியை காப்பாற்றிட வேண்டும். அதற்காக காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிக ளுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை ஒற்றுமை யுடன் சந்தித்து வருகிறோம். சமூக நீதியை காப் பாற்ற வேண்டும் என்ற கொள் கையோடு உறுதியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம்.
அ.தி.மு.க. கூட்டணி கொள்கை இல்லாமல் கூட்டணி சேர்ந்ததால் தற்போது இரண்டாக பிரிந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத் தில் கொண்டுவந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தின் நிதியை பா.ஜ.க. அரசு குறைத்து வருகிறது.
காந்தியாரின் பெயரால் உள்ள திட்டம் என்றாலே பா.ஜ.க. கட் சிக்கு அறவே பிடிக்காது. கோட்சே, வீர சாவர்க்கர் ஆகியோரை பா.ஜ.க.வினர் தியாகிகளாக கொண் டாடி வருகின்றனர். வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட் டிற்கு தப்பி ஓடியவர்களை பா.ஜ.க. அரசு காப்பாற்றி ரூ. 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள் ளது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு இருக்காது. ரேஷன் கடை இருக் காது. எனவே, இந்தியா கூட்டணி யின் சின்னமான பானை சின்னத் திற்கு வாக்க ளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவ ளவன் கூறினார்.
இவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழுத் தலை வருமான என்.கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க. மாவட்ட செய லாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைமை நிலை யச் செயலாளர் இளஞ்சேகுவேரா, துணை, பொதுச் செயலாளர் கனிய முதன் மாவட்ட செயலாளர், கலை யரசன், மாவட்ட செய்தித் தொடர் பாளர் உதயகுமார், ஒன்றிய செயலா ளர் இளமாறன், சிதம்பரம் நாடா ளுமன்ற தொகுதி மேலிடப் பொறுப்பாளர் கிட்டு, ஆலத்தூர் ஒன்றிய மேலிடப் பொறுப்பாளர் தங்கதுரை, தி.மு.க. கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங் கர், வ.சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் என்.ராகவன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்தி ரன், அன்புச்செல்வன், விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆலத் தூர் கிழக்கு ஒன்றிய பகுதியில் உள்ள கொளக்காநத்தம், கொளத் தூர், கூத்தனூர், ஆதனூர், மேல மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் திருமாவளவன் வாக் குகள் சேகரித்தார். இதில் அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்லூர் மாவட்ட பொறுப்பாளர் வி.ஜெக தீசன், ஆலத்தூர் ஒன்றிய பெருந்த லைவர் என்.கிருஷ்ணமூர்த்தி உட் பட ‘இந்தியா’கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.