நாட்டை கட்டி எழுப்பியவர்கள் யார்? சீரழிப்பவர்கள் யார்? சிந்தித்து வாக்களிப்பீர்: ராகுல் காந்தி வேண்டுகோள்

1 Min Read

புதுடில்லி,ஏப்.5- நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. ஒன்றியத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் இணைந்த இந்தியா கூட்டணி மறுபுறம் என பிரதான கூட்டணிகளு டன், பல்வேறு மாநிலக் கட்சிகள் தனித்தனியாகவும் மக்களவை தேர் தலை எதிர்கொண்டு வருகின்றன.
தேர்தல் களத்தில் நிற்கும் வேட் பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரமும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகை யில் இந்தியா கூட்டணியின் வெற் றியை உறுதி செய்யுமாறு அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளம் மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
அதில் அவர், “இந்தியா தற் போது மிகவும் முக்கியமான தருணத் தில் இருக்கிறது.

நாட்டை கட்டி எழுப் பியவர்கள் யார்? சீரழித்தவர்கள் யார்? என்பதை சமூகத்தின் ஒவ் வொரு பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலை உறுதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தர வாதம், ஒவ்வொரு ஏழைப் பெண் ணும் கோடீசுவரர், தொழிலாளர் களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட் சம் ரூ.400, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு, அரசமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற உத்தரவாதங்களை காங்கிரசும், இந் தியா கூட்டணியும் வழங்கி உள்ளன.

அதேநேரம் பா.ஜனதாவோ, வேலையில்லா திண்டாட்டம் உறுதி, விவசாயிகளுக்கு கடன் சுமை, பாது காப்பு மற்றும் உரிமைகள் அற்ற பெண்கள், உதவியற்ற தொழிலாளர் கள், அடித்தட்டு மக்களின் பாகுபாடு மற்றும் சுரண்டல், சர்வாதிகாரம், போலி ஜனநாயகம் போன்றவற்றைத் தான் அர்த்தப்படுத்துகிறது.
நாட்டின் குடிமக்களாகிய உங்க ளது எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கிறது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு நன்கு சிந்தித்து புரிந்து கொண்டு பிறகு சரியான முடிவை எடுங்கள்” என்று ராகுல் காந்தி தெரி வித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *