கருநாடகத்தில் 780 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிருடன் மீட்பு. தீயணைப்பு படைவீரர்கள் செயல்பாடு மன நிறைவைத் தருகிறது, பாராட்டுக்குரியது!
இதுதான் ஊர்ஜிதம்!
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த எல்.முருகன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிதான் ஊர்ஜிதம் என்று!
பி.ஜே.பி.யின் சாதனையோ!
இந்தியா கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறை யிலும், மீதி பேர் பிணையிலும் உள்ளனர் என்று பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டா கிண்டல் அடித்திருக் கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துத்தான் பி.ஜே.பி. வெற்றி பெற முடியும் என்ற பலவீனத்தை ஒப்புக்கொள்கிறார்,
ஜே.பி.நட்டா.
மன நிறைவு
Leave a Comment