கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கவில்லை!
இரண்டு ‘புதிய தொழிற்சாலை’களை இப்பொழுது உருவாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி!
ஒன்று, பொய் சொல்வதற்காகவே உருவாக்கிய ‘‘பொய்த் தொழிற்சாலை!’’
இரண்டு, கிரிமினல் குற்றவாளிகளையும், ஊழல்வாதிகளையும் கட்சியில் சேர்த்து தூய்மைப்படுத்துவதற்கென்றே உருவாக்கியுள்ள ‘‘தூய்மைப்படுத்தும் தொழிற்சாலை!’’
திருநெல்வேலி, ஏப்.3 கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கவில்லை. ஆனால், இப்பொழுது இரண்டு புதிய தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. ஒன்று, பொய் சொல்வதற்காகவே உருவாக்கிய ‘‘பொய்த் தொழிற் சாலை’’. இரண்டாவது, கிரிமினல் குற்றவாளிகளையும், ஊழல்வாதிகளையும் கட்சியில் சேர்த்து தூய்மைப்படுத்து வதற்கென்றே உருவாக்கியுள்ள ‘‘தூய்மைப்படுத்தும் தொழிற்சாலை’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (2.4.2024) இரவு 8 மணியளவில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இராபட் புரூஸ் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
கொள்கைச் சான்றோர்களையும் – கடும் உழைப்பாளிகளையும் பெற்றிருக்கின்ற நெல்லை தொகுதி!
சிறப்பான பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக் கின்ற ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர்களையும், கடும் உழைப்பாளிகளையும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கக்கூடிய, வாக்காளப் பெருமக்களையும் கொண் டிருக்கக் கூடிய அருமையான நெல்லை தொகுதிக்கு இன்றைக்கு வருகை தந்து உங்களனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளர்
மாபெரும் வெற்றியைப் பெறுவார்!
இங்கே சற்றுமுன் உரையாற்றி அமர்ந்திருக்கின்ற வெற்றி வேட்பாளர் – காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்த – திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாபெரும் வெற்றியைப் பெறுவார்.
இந்தியா கூட்டணியை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் நம்முடைய ஒப்பற்ற முதல மைச்சர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக் கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆவார். அவரால் தேர்ந்தெடுக்கப் பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட ஒதுக்கப் பட்ட 10 தொகுதிகளுக்கு அருமையான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். சற்று காலதாமதம் ஆனாலும்கூட, சிறப்பான வேட்பாளர்கள் தேர்வு செய் யப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு அய்யா இராபர்ட் புரூஸ் அவர்கள்தான் எடுத்துக்காட்டான அருமையான வேட்பாளர் ஆவார்.
ஏனென்றால், அவர் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்; செறிந்த சிந்தனையாளர். நான் அதிக நேரம் உரையாற்ற வாய்ப்பில்லை. காரணம் இப்பொழுதே மணி, என்னு டைய கடிகாரப்படி 9.24 ஆகும். இரண்டு கடிகாரங்கள் ஒத்துப்போவதில்லை.எனவேதான், 10 மணிக்கு என் உரையை முடித்துக் கொள்ளவேண்டும்.
‘‘மாற்றம் தேவை, மாற்றம் தேவை’’ என்று கடைசியில் ‘‘மிஞ்சியது ஏமாற்றம்தான்!’’
கடந்த 10 ஆண்டுகாலத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி யில் மிகப்பெரிய கொடுமையான பாதகமான செயல்கள் தான் எங்கும் நடந்தன. ‘‘மாற்றம் தேவை, மாற்றம் தேவை” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களால், ‘‘மிஞ்சியது ஏமாற்றம், ஏமாற்றம்” என்பதைத்தான் இன் றைக்கு நாமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு இடத்திற் கும் செல்லக்கூடிய சூழ்நிலையில், இன்னும் அரை மணி நேரத்திற்குள் அவற்றையெல்லாம் விளக்கி உரையாற்ற முடியாது. ஆகவே, அறிவார்ந்த வாக்காளர் பெருமக்கள் விளங்கிக் கொள்வதற்காக நான்கு புத்தகங்கள் சிறிய வெளியீடுகளாக – எளிமையாக – சாதாரண மக்களுக்கும் புரியும்படியாக – தேர்தல் பரப்புரைக்காக கொண்டு வந்திருக்கின்றோம்.
தேர்தல் பரப்புரைக்காக
நான்கு சிறிய நூல்கள்!
ஒன்று, ‘‘2024 இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்கவேண்டும் ஏன்?”
என்பதற்கான ஆதாரப்பூர்வமான செய்திகள்; ஒன் றைக்கூட மறுக்க முடியாது. எல்லாமும் ஆதாரப்பூர்வ மானது.
2. ‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப் போம்!”
என்பது உறுதிதான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.அதற்குரிய காரண காரியங்கள் – விளக்கம்.
‘‘ஊழல்களிலேயே ஒரு புதுவகையான ஊழலை’’ உருவாக்கி இருக்கிறார்கள்
அதற்கடுத்த நூல், ‘‘ஊழலை ஒழிப்போம்” என்று சொல்லி வந்த ‘‘உத்தமர்”களுடைய ஆட்சியில், இன் றைக்கு என்ன லட்சணம் என்றால், ‘‘ஊழல்களிலேயே ஒரு புதுவகையான ஊழலை” உருவாக்கி இருக்கிறார்கள்.
3. ‘‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்.”
ஊழலிலேயே இதுபோன்ற ஊழலை அவரால்தான் செய்ய முடியும். ஏனென்றால், மோடி வித்தை என்பது மிகவும் வித்தியாசமான வித்தையாகும். தேர்தல் பத்திர முறைகேடுகளை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது.
4.‘‘பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!”
மேற்சொன்ன நான்கு புத்தகங்களையும் மக்களி டையே பரப்பவேண்டும் என்பதற்காகத்தான், அதற் குரிய செலவுகளைப்பற்றி கவலைப்படாமல், மக்களுக் குப் போய்ச் சேரவேண்டும் ஆதாரப்பூர்வமாக. நீங்கள் படித்தால் மட்டும் போதாது – மற்றவர்களையும் படிக்க வைக்கவேண்டும். அப்படி இந்தப் புத்தகங்களைப் படித்து முடித்தால், நிச்சயமாக, எங்கே நம்முடைய இந்தியா கூட்டணி வேட்பாளர் யார்? என்று பார்த்து அவர்களுக்கு வாக்களித்து, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்திற்காக அதனை செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
‘‘கேரண்டீ, கேரண்டீ’’ என்று இப்போது
புது ‘டீ’ கொண்டு வந்திருக்கிறார்!
மோடி, ‘‘கேரண்டீ, கேரண்டீ” என்று இப்போது புது ‘டீ’ கொண்டு வந்திருக்கிறார். இதற்கு முன்னால், அவர் கொடுத்த ‘டீ’யெல்லாம் வித்தியாசமானது. ஆகவே, இப்பொழுது ‘‘மோடி ஜியினுடைய கேரண்டீ” என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே அவர் கொடுத்த ‘கேரண்டீ’ என்ன ஆனது என்பதைப்பற்றியெல்லாம் இங்கே அழகாக எடுத்து விளக்கினார்கள்.
வேலை வாய்ப்பாக இருந்தாலும், மற்றவையாக இருந்தாலும். ஊழலை ஒழிப்போம் என்று சொன்ன வர்கள், எப்படியெல்லாம் தேர்தல் பத்திரங்களை வைத்து மிகப்பெரிய அளவிற்கு, பகிரங்கமாக விஞ்ஞானபூர்வ ஊழலை செய்திருக்கிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்திய நாட்டில் அமையப் போவது
இந்தியா கூட்டணியின் ஆட்சிதான்!
நாங்கள் ஆரூடம் பார்த்து எதையும் சொல்லக் கூடியவர்கள் அல்ல. எங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், மக்களுடைய நாடியைப் பிடித்து, மக்களை சந்தித்துப் பேசக் கூடியவர்கள் நாங்கள்.
அந்த வகையில் சொல்லுகிறோம், ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, இந்திய நாட்டில் அமையப் போவது இந்தியா கூட்டணியினுடைய ஆட்சிதான் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். காரணம், கட்சி, தலைவர்கள்கூட இரண்டாம் பட்சம்தான். மக்கள் அந்த அளவிற்கு இன்றைய ஒன்றிய ஆட்சியைப்பற்றி உணர்ந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு வேதனைப்பட்டு இருக்கிறார்கள்.
நிச்சயமாக ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு பிரதமர் மோடி என்னதான் பிரச்சாரம் செய் தாலும், என்னதான் வீர வசனம் பேசினாலும், உருக்க மாகப் பேசினாலும், தமிழ்நாட்டிற்கு வந்து ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்று சொன்னாலும், வாக்காளப் பெருமக்கள் ஏமாறமாட்டார்கள்.
அதற்குக் காரணம், அவர் ‘‘மக்கள் என் குடும்பம்” என்று சொல்வது, உள்ளபடியே அது உணர்வுப்பூர்வமாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?
மணிப்பூர் நிகழ்வை தலைவர்கள் கண்டித்தனர்!
மணிப்பூரில் எங்கள் சகோதரிகள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், இன்னும் அவருடைய மொழியில் சொல்லவேண்டுமானால், ‘நாரிசக்தி’யை – தாய்மார்கள் மன்னிக்கவேண்டும்; என்னுடைய தரத் திற்கு அதனைச் சொல்வதற்குக் கூச்சமாக இருக்கிறது. அதனை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எங்களுடைய சகோதரர்களுடைய ரத்தம் எங்கே சிந்தப்பட்டாலும், அதற்காக அனுதாபப்படுகின்றவர்கள் நாங்கள். காரணம், நாங்கள் மனிதத்தை மதிக்கின்றவர்கள்; மனிதநேயக்காரர்கள். மணிப்பூரில் பெண்களை நிர் வாணமாக்கி ஓட ஓட விரட்டி, கொடுமைப்படுத்தினார்கள். அதுகுறித்து உலகளாவிய அளவிற்குப் பேசப்பட்டது. எல்லா இடங்களிலிருந்தும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்திய நாட்டுப் பிரதமர் மோடி அவர்களே, 2047 ஆம் ஆண்டுகள்வரை தீட்டம் தீட்டி, அதுவரையில் பிரதமராக தான் இருக்கவேண்டும் என்று நினைத்து, ஜனநாயகத்திற்கு விடை கொடுத்துவிட்டு, அந்த இடத் தில் தன்னுடைய எதேச்சதிகாரத்தை அமர வைக்க வேண்டும் என்று நினைத்து, கணக்குப் போட்டுச் சொல்லக்கூடிய பிரதமர் மோடி அவர்களே, சொல் லுங்கள்!
மணிப்பூருக்கு ஓடியிருக்கவேண்டாமா? மணிப்பூர் மக்களின் துயரத்தைத் துடைத்திருக்கவேண்டாமா?
தயவுசெய்து, ‘‘140 கோடி மக்களும் உங்களுடைய குடும்பம்” என்று சொன்னால், நீங்கள் என்ன செய் திருக்கவேண்டும்? மணிப்பூருக்கு ஓடியிருக்கவேண் டாமா? மணிப்பூர் மக்களின் துயரத்தைத் துடைத் திருக்கவேண்டாமா? இது வடகிழக்கே!
இங்கே நம்மூரை எடுத்துக்கொள்ளலாம். இந்த நெல்லையில், மழை, புயல் வெள்ளத்தால் நீங்கள் பெற்ற அவதிகளையெல்லாம் நாங்கள் பார்த்தபொழுது கண்ணீர் வடித்தோம்.
அதேநேரத்தில், நம்முடைய அமைச்சர்கள், நம்மு டைய மேயர், நம்முடைய சட்டப்பேரவை உறுப் பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி போன்றவர்கள் எல்லாம் ஓடோடி வந்து, மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நேரில் வந்து மக்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார். ஏனென்றால், இது மனிதநேய இயக்கமாகும்.
‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று சொன்ன வள்ளலார் மண் இது.
மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாரா,
பிரதமர் மோடி!
அப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு மூன்று முறை வருகிறார் பிரதமர் மோடி. இராமேசுவரத்திற்கு வருகிறார்; நெல்லையில் வந்து பேசுகிறார்; தூத்துக்குடிக்குப் போகிறார்; ஏவுகணை தளத்தைத் தொடங்கி வைப்பதற்கு குலசேகரப்பட்டினத்திற்குச் செல்கிறார். மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை கொடுப்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ‘‘நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறீர்கள்?” என்று ஒரு வார்த்தை கேட்டது உண்டா? ‘‘இப்பொழுது மட்டும் ஓட்டிற்காக மக்களைச் சந்திக்க வருகிறீர்களே, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது?” என்று மக்கள் கேட்டால், அது நியாயம்தானே!
ஆகவே, மோடி அவர்களே, நீங்கள் என்ன வித்தை செய்தாலும், அதனை நம்புவதற்கு மக்கள் இன்றைக்குத் தயாராக இல்லை. உங்களை நன்றாகப் புரிந்துகொண்டுள் ளார்கள் இந்த மக்கள்.
தேர்தல் பத்திரத் திட்டத்தில்
பா.ஜ.க.வின் ஊழல்!
தேர்தல் பத்திரத் திட்டத்தில், ‘‘ஊழல், ஊழல், ஊழல்” – அதனைக் கேட்டு உச்சநீதிமன்றம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் காதைத் திருகியது. மார்ச் 6 ஆம் தேதிக்குள் அதற்குரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
உடனே மார்ச் 5 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு போடுகிறார்கள். ஜூன் 30 ஆம் தேதிவரை கால அவகாசம் வேண்டும் என்று.
உச்சநீதிமன்றத்தின் கண்டனம்!
நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. உச்சநீதி மன்ற நீதிபதிகள் என்ன கட்சிக்காரர்களா? ஒரு சார்புள்ளவர்களா? உச்சநீதிமன்றம்தானே கடைசி நம்பிக்கை – அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத் தைக் காப்பாற்றுவதற்கு. அப்படிப்பட்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டார்கள், ‘‘என்னய்யா, கணினி உலகத்தில் விளையாடுகிறீர்களா? உங் களால் செய்ய முடியவில்லை என்றால், நாங்கள் அதனைச் செய்கிறோம்” என்று கண்டிப்புடன் சொன்னார்கள். அப்படிக் கொடுக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்கள்.
வேறு வழியில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எல்லா ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தது.
ஒருமுறை, இரண்டு முறை அல்ல நண்பர்களே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினை ஏழு, எட்டு முறை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
ஆளுநர்கள், வித்தைக்காரர்களாகவும், ஒன்றிய அரசின் ஏவுகணைகளாகவும் இருக்கிறார்கள்!
ஆளுநரையே அரசியல் கருவியாக்கிய புதுமை மோடி ஆட்சியை தவிர, வேறு ஆட்சியில் நடந்தது கிடையாது.
ஆளுநர்கள், ஆளுநர்களாக இருந்தார்கள் முன்பு. இப்பொழுது ஆளுநர்கள், வித்தைக்காரர் களாகவும், ஒன்றிய அரசின் ஏவுகணைகளாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கொடுமைகள் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அய்ந்தாண்டுகளில் உலக வரலாற்றில் வேறு எங்கும் இல்லாத கொடுமைகள் நடைபெற்று இருக்கின்றன. இது அறிவார்ந்த மக்கள் நிறைந்த கூட்டம் – சிந்தித்துப் பாருங்கள்.
நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கியோ, இழிவுபடுத்தியோ பேசுபவர்கள் அல்ல. நாங்கள் பதவிக்குப் போய் அமரவேண்டும் என்பதற்காகப் பேசுபவர்களும் அல்ல.
5 ஆண்டுகாலத்தில், துணை சபாநாயகர் மக்களவையில் உண்டா?
நாடாளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டுவரையில் – இந்த 5 ஆண்டுகாலத்தில், துணை சபாநாயகர் மக்களவையில் உண்டா?
அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
நிர்வாகத் துறையில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். தனியார்த் துறையில் இருந்து கொண்டு வந்து, அவர்களை கூட்டுச் செயலாளராக ஒன்றிய அரசில் நியமிப்பேன் என்று சொல்கிறார்.
அதனை எதிர்க்கட்சியினர் எதிர்த்துக் கேள்வி கேட்டால், அதற்குப் பதில் சொல்லியே பிரதமர் மோடி அவர்களுக்குப் பழக்கமில்லை.
மணிப்பூரில் இப்படி கலவரம் நடைபெறுகிறதே, நீங்கள் போகவில்லையா? என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர்.
146 எம்.பி.,க்களை
‘சஸ்பெண்ட்’ செய்தனர்!
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், தன்னுடைய எதேச்சதிகாரத்தைப் பயன்படுத்தி, மிருக பலத்தைப் பயன்படுத்தி,. ரோடு ரோலர் மெஜாரிட்டி என்று சொல்லுவார்கள் – அப்படிப்பட்ட ஒரு பெரும்பான்மை தங்களுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது என்பதற்காக என்ன செய்தார் தெரியுமா, மக்களே! 146 எம்.பி.,க்களை ‘சஸ்பெண்ட்’ செய்தார்.
இங்கே சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘சஸ்பெண்ட்’ செய்வது இயல்புதான். அதன்படி, அடுத்த நாளே அவர்கள் அவைக்கு வரலாம். ஆனால், தொடர் முழுவதும் 146 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்தனர்.
புதுக்கோட்டை அப்துல்லா போன்ற நண்பர்களை, அடுத்த தொடர் முழுவதும் வரக்கூடாது என்று ‘சஸ் பெண்ட்’ செய்தனர்.
ஆகவேதான், ஜனநாயகத்தைக் காப்பாற்றி ஆக வேண்டும் என்பதில் மிக முக்கியமான தேர்தல் வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலாகும். வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறப் போகின்ற தேர்தலாகும்.
இந்தத் தேர்தல் -முன்பு நடைபெற்ற மற்ற தேர்தல் களைப் போன்றது அல்ல; என்னுடைய வயது 91 என்று சொன்னார்கள்; இவர்கள் நினைவூட்டும்பொழுதுதான் என்னுடைய வயதை நான் நினைத்துக் கொள்வேன். அது இயல்பாக எனக்கு நினைவிற்கு வருவதில்லை. தேவையும் இல்லை.
மருத்துவர்களின் அறிவுரையை மீறித்தான்
நான் தேர்தல் பரப்புரைக்கு வந்திருக்கின்றேன்!
உடல்நலம் சரியில்லை, மருத்துவர்கள் சுற்றுப்பயணம் செய்யவேண்டாம் என்று சொன்னார்கள். அதைப்பற்றி யெல்லாம் எங்களுடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்.
மருத்துவர்களின் அறிவுரையை மீறித்தான் நான் வந்திருக்கின்றேன். தேர்தல் பரப்புரைக்காக வந்திருக் கின்றேன். காரணம், இந்தப் பணியிலேயே என்னுடைய வாழ்வு முடிந்துவிட்டால், அதைவிட எனக்கு வேறு பெரிய வாய்ப்பில்லை. ஜனநாயகத்தைக் காப்பாற்று வதற்கு ஒருவன் முயற்சி செய்தான்; அந்த முயற்சி யிலேயே அவன் வெற்றி பெற்றானா? தோற்றானா? என்பது முக்கியமல்ல. ஆனால், அந்த முயற்சியை செய்தான் என்கிற உணர்வு இருக்கவேண்டும். அந்த உணர்வு எனக்கு எப்படி ஏற்பட்டது?
ஜனநாயகம் இன்றைக்குத்
தீவிர சிகிச்சைப் பிரிவில்
மரணப் படுக்கையில் இருக்கிறது!
94 வயதிலும் தந்தை பெரியார் அவர்கள், முக்கலும், முனகலுடன், கையிலே மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர் அவர். அந்தத் தலைவருடைய தொண்டன் என்ற முறையிலே, நான் இந்தப் பணியைச் செய்கின்றேன். ஜனநாயகம் இன்றைக் குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணப் படுக்கையில் இருக்கிறது.
அதனைக் காப்பாற்றுவதற்காகத்தான் தலை சிறந்த சமூக மருத்துவர் – தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாகத் திகழக்கூடிய முதலமைச்சர் முத்துவேல் கருணா நிதி ஸ்டாலின் அவர்கள் கடமையுள்ளத்தோடு பணி செய்கின்றார்.
சர்வாதிகாரமா? ஜனநாயகமா? சர்வாதிகாரம் என்ன செய்யும்? நான்தான் எல்லாமும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு செயல்படும். இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய ஒவ்வொரு பிரிவும் ஒன்றிய அரசால் தூக்கி எறியப்படுகிறது.
‘‘ஜூம்லா’’ என்று ஒரு புதிய வார்த்தையை சொல்கிறார்கள்!
2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. கொடுத்த தேர்தல் வாக் குறுதிகள் என்னாயிற்று? என்று கேட்டால், ‘‘ஜூம்லா” என்று ஒரு புதிய வார்த்தையை சொல்கிறார்கள். ஜூம்லா என்றால், புரூடாவாம் – பொய்யாம்.
தமிழ் மொழி, செம்மொழி என்ற
தகுதியைப் பெற்றது!
காங்கிரஸ் கட்சியின் தலைமையில், மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி – யுபிஏ ஆட்சி சிறப்பாக நடந்தது.
அப்பொழுதுதான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களுடைய முயற்சியினால், தமிழ் மொழி, செம்மொழி என்ற தகுதியைப் பெற்றது.
ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக மன்மோகன்சிங் அவர்கள் இருந்தார்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது!
அதற்குப் பிறகு, ‘‘மாற்றம், மாற்றம் மாற்றம்” என்று சொன்னார்கள். மாற்றம் என்பது தவறு இல்லை. மாற்றம் என்பது இயல்பானது. புத்தர் காலத்திலிருந்து, காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
மாற்றம் என்பது இவர்கள் நினைத்தது எதில் முடிந்தது என்றால், ஏமாற்றம் என்பதில்தான் முடிந்தது. அந்த ஏமாற்றத்தினுடைய விளைவுதான், நம்முடைய இளைஞர்கள் வேலையின்மையால் தெருத் தெருவாக அலைகிறார்கள். இன்றைக்கு அந்த எண்ணிக்கைப் பெருகிக் கொண்டே போகிறது.
தமிழ்நாட்டில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில், ஒன்றிய அரசினுடைய வங்கி உள்பட தொழில்துறை நிறுவனங்களில், மாநில மொழி அறிவு தேவையில்லை என்றாக்கி, அங்கே இவர்கள் மற்றவர்களை, வட மாநிலத்தவர்களை நுழைக்கிறார்கள்.
ராகுல் காந்தி ஒரு இளந்தலைவர். ஒவ்வொரு நாளும் சிம்மசொப்பனமாக மோடிக்கு இருக்கிறார்.
தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு
ஒதுக்கிய நிதி எவ்வளவு?
‘‘தமிழ் ரொம்ப நல்ல மொழிதான்” என்று பிரதமர் மோடி இங்கே வந்து சொல்லுவார். ஆனால், அந்தத் தமிழுக்கு இவர் ஒதுக்கிய நிதி எவ்வளவு?
நடைமுறையில் இல்லாத, செத்தமொழி என்று அறி விக்கப்படுகிற சமஸ்கிருதத்திற்கு 1,400 கோடி ரூபாய்.
தமிழ் மொழிக்கு அதில் 10 சதவிகித நிதிகூட கிடை யாது.
உண்மை நிலைமை இப்படி இருக்கையில், தமிழ், தமிழ் என்று பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும்
ரூ.15 லட்சம் பொத்தென்று விழும் என்று சொன்னார்கள்.
என்னாயிற்று?
பணமதிப்பிழப்பை திடீரென்று அறிவித்து,
நாட்டு மக்களை வேதனைக்குள்ளாக்கினார்!
கருப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் என்றார். ஆனால், என்ன செய்தார் பிரதமர் மோடி. பணமதிப் பிழப்பை திடீரென்று அறிவித்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தினார். இந்த அறிவிப்பு குறித்து, ஒன்றிய நிதியமைச்சருக்குத் தெரியாது, ரிசர்வ் வங்கிக்குத் தெரியாது – பிரதமர் மோடிக்கு மட்டும் தெரியும்.
யார் எதிர்த்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டினைக் கொண்டுவந்தார். பிறகு அவருடைய ஆட்சியிலயே சிறிது காலம் கழித்து, 2 ஆயிரம் ரூபாய் செல்லாது என்று அறிவித்தனர்.
2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பெருகிவிட்டன. ஆகவே, அதனைத் திரும்பப் பெறுகிறோம் என்று சொன்னார்கள். ஆகவே, இப்படி ஒவ்வொரு துறையை யும் அவர்கள் சீரழித்தனர்.
ஊழலுக்காக நிதித் துறை சட்டத்தையே மாற்றினார்கள்!
‘‘ப்ரீபெய்டு ஊழல், போஸ்ட்பெய்டு” ஊழலுக்காக நிதித் துறை சட்டத்தையே மாற்றினார்கள். தேர்தல் ஆணைய சட்டத்தையே மாற்றுகிறார்கள். இப்படி நான்குமுறை, அய்ந்து முறை சட்டத்தைத் திருத்தி ஊழலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்.
‘‘நான் ஏழைகளுக்காக இருப்பேன்” என்று கண்ணீர் வடிக்கக்கூடிய பிரதமர் மோடி அவர்கள், 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார்?
அவர் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் சாதாரண மானதா? கோடிக்கணக்கான ஊழல்கள்; அதனைச் சொன்னாலே மிகத் தெளிவாக உங்களுக்குத் தெரியும்.
உச்சநீதிமன்றம் கண்டித்து சொன்ன பிறகுதான், இன் றைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது.
நெருக்கடி காலத்திற்குப் பிறகு
நடைபெற்ற தேர்தல்!
இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான், நெருக்கடி காலம், மிசா காலம் வந்தது. ஆனால், அவர் அதை வெளிப்படையாக செய்தார். வெளிப்படையாக செய்தது மட்டுமல்ல, அதற்குப் பிறகு தேர்தலை அறிவித்தார்கள்.
சிறைச்சாலையில் எங்களை மிரட்டினார்கள்!
‘மிசா’ காலத்தில் நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் இருந்தோம், தளபதி ஸ்டாலின் உள்பட எல்லோரும் அடிபட்டோம், பாதிக்கப்பட்டோம்.
சிறைச்சாலையில் எங்களை மிரட்டினார்கள், ‘‘இனி மேல் உங்கள் இயக்கம் இருக்காது; நீங்கள் வெளியிலேயே போக முடியாது” என்றெல்லாம் சொன்னார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்படக் கூடிய சூழ் நிலையில், உங்களுடைய ஆட்சிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்று இந்திரா காந்தி அம்மை யாருக்கு சிலர் யோசனை சொன்னார்கள். உடனே அவர், ‘‘இல்லை, இல்லை; தேர்தல் நடத்தவேண்டும்” என்று சொன்னார்.
அந்தக் காலகட்டத்தில் மிசா கைதிகள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டோம். தேர்தலும் நடந்தது.
அந்தத் தேர்தலில், அந்த அம்மையார் உள்பட பல தலைவர்கள் தோல்வியுற்றனர்.
இதிலிருந்து இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
தேர்தல் ஆணையத்தை தன்வயப்படுத்தியிருந்தால், இந்திரா காந்தி அம்மையார் தோல்வியுற்று இருப்பாரா?
அறிவுநாணயத்தோடு வெளிப்படையாக அவர் செயல்பட்டார். அவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த ஓர் அரசியல் நடத்தக்கூடிய அளவிற்கு இருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், இன்றைக்கு இருப்பது போல், தேர்தல் ஆணையத்தை தன்வயப்படுத்தியிருந் தால், அவர் தேர்தலில் தோல்வியுற்று இருப்பாரா?
இதற்கு என்ன அர்த்தம்?
தேர்தல் ஆணையம் அன்றைக்குச் சுதந்திரமாக நடந்துகொண்டது. இன்றைக்கு இருப்பதுபோன்று தில்லுமுல்லுகள் இல்லை அன்றைக்கு.
உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது!
இன்றைக்கு சுதந்திரமான முறையில் தேர்தல் நடை பெறவில்லை என்பதை ஒரு வழக்கில்கூட உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
தேர்தல் ஆணைய தேர்வுக் குழுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுப்பினராக இருக்கவேண்டும். ஆனால், அதை இன்றைய ஒன்றிய அரசு செய்யவில்லை.
இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஜனநாயகத்தினுடைய காவலன் என்பதற்கு அடை யாளமாக, தேர்தல் ஒப்புகைச் சீட்டுகளை நூற்றுக்கு நூறு சதவிகிதம் எண்ணவேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளது.
மக்களால் இன்றைக்கு இருக்கின்ற ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வரப் போவதில்லை. ‘‘நாங்கள்தான் மீண்டும் வருவோம், வருவோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், ‘‘தேர்தல் பெட்டி கருவுற்றால் ஒழிய, அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது நிச்சயமாகக் கிடையாது” என்பதுதான் மிகவும் முக்கியம்.
28 கட்சிகளையும் ஒன்று சேர்ப்பதற்கு வழிகாட்டியவர் நம்முடைய முதலமைச்சர்!
இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேரமாட்டார்கள் என்று இன்றைக்கு ஆளும் ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு நினைத்தது. ஆனால், 28 கட்சி களையும் ஒன்று சேர்ப்பதற்கு வழிகாட்டியவர் நம்மு டைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
காங்கிரஸ் கட்சி காலத்திலேயே
இக்காலகட்டம் ஒரு பொற்காலம்!
மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கக் கூடிய அமைப்பாக, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள அமைப்பாகத் திகழ்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய தலைமை- அதனுடைய காலத்திலேயே இது ஒரு பொற்காலம் போன்ற சூழ்நிலை தற்போது அமைந்திருக்கின்றது.
ஒரு பக்கத்தில், அதன் தலைவராக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுனே கார்கே அவர்கள்.
அதுபோலவே, சோனியா காந்தி அம்மையார் அவர்கள், தெளிவாக உணர்ந்து, நாட்டினுடைய நிர்வாகத்தைப்பற்றி கவலைப்படக் கூடிய ஒருவர்.
இந்தியா முழுவதற்கும் ஒப்பற்ற தலைவராக ராகுல்காந்தி விளங்குகிறார்!
எல்லாவற்றையும் தாண்டி, இளந்தலைவராக மக்கள் மத்தியில், நம்பிக்கை நட்சத்திரமாக தமிழ்நாட்டில் எப்படி மு.க.ஸ்டாலின் இருக்கிறாரோ, அதுபோல, இந்தியா முழுவதற்கும் ஒப்பற்ற தலைவராக ராகுல்காந்தி விளங்குகிறார்.
அவருடைய பெயரைக் கேட்டாலே, பிரதமர் மோடி நடுநடுங்குகிறார்.
மோடி அவர்களைப் பார்த்து, ராகுல் காந்தி அவர்கள், நேரிடையாகவே, ‘‘பிரதமர் மோடி ஜி அவர்களே, தமிழ் நாட்டில் நீங்கள் என்னதான் செய்தாலும், அங்கே நீங்கள் காலூன்ற முடியாது; நூறு ஆண்டுகள் ஆனாலும், தமிழ் நாட்டில் நீங்கள் ஆட்சியையோ, அதிகாரத்தையோ பிடிக்கலாம் என்ற நினைக்காதீர்கள்’’ என்று ஓங்கி அடித்தார்.
ராகுல்காந்தி தேர்தலில் நிற்கக்கூடாது என்பதற்காக பல சூழ்ச்சிகளை செய்தனர்!
அதனால், ராகுல் காந்தி அவர்களின் குரலே நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக, பல சூழ்ச்சிகளை செய்தனர். தேர்தலிலே அவர் போட்டி போட முடியாது என்ற அளவிற்கு செய்தனர். ஜனநாய கத்தினுடைய மிகப்பெரிய கொடுமை அன்று நடை பெற்றது. அதையும் காதைப் பிடித்துத் திருகி உச்சநீதி மன்றம் கண்டித்தது.
தமிழ்நாடு இவ்வளவு பெரிய வளர்ச்சியடைந்திருக் கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியா கூட்டணி ஒன்றியத்தில்
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 30 லட்சம்
பணியிடங்களை நிரப்புவோம்:
ராகுல் காந்தி உறுதி!
ராகுல் காந்தி அவர்கள் சொன்னார், ‘‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றிய அரசு பணியிடங் களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்” என்றார்.
ஆனால், அதேநேரத்தில் நீங்கள் நினைவில் வைத் துக் கொள்ளுங்கள்; இன்றைய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வரப் போவதில்லை. மக்கள் அவர்களை வர விடமாட்டார்கள்.
காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை உள்ள மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. என்னதான், ஊடகங்களின் துணையோடு விளம்பர வெளிச்சத்தை காட்டினாலும், அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
நிறைவேறியிருந்தால்…
மன்மோகன்சிங் தலைமையில் அன்றைக்கு இருந்த யு.பி.ஏ. அரசில் அங்கம் வகித்த தி.மு.க. – கப்பல்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு அவர்கள் முயற்சியில் ‘‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக” 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்யப்பட்டு, 23 கிலோ மீட்டர்தான் அத்திட்டம் நிறைவடைவதற்கு மீதமிருக் கிறது என்ற நிலையில், இல்லாத இராமன் பாலம் என்ற ஒன்றைச் சொல்லி, உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, தடையாணையைப் பெற்று அத்திட்டத்திற்கு முட்டுக் கட்டைப் போட்டனர்.
அவ்வழக்கில் பல ஆண்டுகாலம் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
நீதிபதிகள் கேட்டார்கள், ‘‘இராமன் பாலத்திற்கு எங்கே ஆதாரம்” என்று கேட்டார்கள்.
ஆதாரமில்லை என்று கடைசியில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
‘‘இராமன் பாலம் என்ற ஒன்று இல்லை; அது வெறும் மணல் திட்டுகள்தான்” என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறு வதற்கான முயற்சிகளை செய்வோம் என்று சொன்னார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறியி ருந்தால், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிற்கே வேலை வாய்ப்பு, பொருளாதார உயர்வு ஏற்பட்டு இருக்கும்.
வேலை வாய்ப்பு, பொருளாதார வளம் வரக்கூடிய அந்தத் திட்டத்திற்காக ஒற்றைக் கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசு.
ஒரு தொழிற்சாலையாவது
பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில்
தொடங்கப்பட்டு இருக்கிறதா?
தமிழ்நாட்டின்மீது அக்கறை, தமிழ்நாட்டு மக்கள்மீது அக்கறை நிறைய இருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி இருக்கவேண்டாமா? ஒரு தொழிற்சாலையையாவது இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கியிருக்கிறார்களா?
நேரு காலத்தில் நடந்ததைப்போல, கல்வி வள்ளல் காமராசர் அவர்கள் காலத்தில் நடந்ததைப்போல, அண்ணா ஆட்சிக் காலத்தில் நடந்ததைப்போல, கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போல, தமிழ்நாட்டின் இன்றைய ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய புதிய தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதைபோல, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி எதையாவது செய்திருக்கிறதா?
அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
இரண்டு புதிய தொழிற்சாலைகளை
உருவாக்கிய மோடி!
இரண்டு புதிய தொழிற்சாலைகளை மோடி அவர்கள் உருவாக்கியிருக்கிறார்.
நமக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறதே, ஆசிரியர் சொல்கிறாரே என்னவாக இருக்கும் என்று நீங்கள் எல்லாம் நினைக்கலாம்.
நாள்தோறும் பொய்களைப் பரப்பிட –
பொய்த் தொழிற்சாலை!
ஒன்று, பொய் சொல்வதற்காகவே உருவாக்கிய ஒரு பொய்த் தொழிற்சாலை. பொய்யை உருவாக்கித் தருவது. சமூக வலைளத்தில் பார்த்தீர்களேயானால், ஆங்கிலத் தில், ‘‘ஜிக்ஷீஷீறீறீs” என்று சொல்வார்கள். பொய்யான செய்தி யைப் பரப்புவது.
இன்றைக்குக்கூட நடிகர் ஒருவர் கட்சி தொடங்கு கிறார் என்றவுடன், ‘‘திராவிட கட்சிகளுக்கு ஆதரவு” தருகிறது அவருடைய கட்சி என்ற ஒரு செய்தியைப் பரப்பினார்கள். ‘‘நாங்கள் அப்படி சொல்லவில்லை” என்று அவர்கள் அண்மையில் மறுத்திருக்கிறார்கள்.
ஆகவே, நாள்தோறும் பொய்களைப் பரப்பிட ஒரு பொய்த் தயாரிப்பு தொழிற்சாலையை வைத்திருக் கிறார்கள்.
அதுதான் அவர்கள் உருவாக்கியுள்ள மிகப்பெரிய தொழிற்சாலை. பா.ஜ.க.வினுடைய மிகப்பெரிய தொழிற்சாலை. ‘‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட்டுக் காட்டுவோம்” என்பதுபோல, அவர்கள் பொய்க்கு மிகப்பெரிய அளவிற்குப் பொருள் கொடுக்கிறார்கள்.
ஊழல்வாதிகளை, குற்றவாளிகளைத் தூய்மைப்படுத்தும் தொழிற்சாலை!
அடுத்த தொழிற்சாலை என்னவென்றால், தூய்மைப்படுத்துவது. யாரெல்லாம் எதிர்க்கட்சியில் இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் மிரட்டி, பா.ஜ.க.வில் சேரச் சொல்வது.
எதிர்க்கட்சிக்காரர்கள் ஏதாவது ஒன்று சொன் னால், அவர்களை மிரட்டுவது. ஆனால், அவர் களே பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டால், உடனடியாக தூய்மைப்படுத்திவிட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளை யும் தூய்மைப்படுத்தக் கூடிய தொழிற்சாலையை வைத்திருக்கிறார்கள்.
எனவே, காவித் துண்டை மேலே போட்டுக் கொண்டால், தூய்மையானவர்கள். தேடப்படும் கிரிமினல் குற்றவாளிகள் எல்லோரும் காவித் துண்டை அணிந்து கொண்டிருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றம் பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதைச் சொல்லியிருக்கிறது?
இதை நாங்கள்தான் சொல்கிறோம் என்று அண்ணா மலைகள் எங்கள்மீது கோபப்படவேண்டிய அவசிய மில்லை. இன்று காலையில்கூட உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
பி.ஜே.பி.யைச் சேர்ந்த தேடப்படும் கிரிமினல் குற்றவாளி ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, ‘‘எனக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை” என்று சொல்கிறார்.
‘‘தேடப்படும் கிரிமினல் குற்றவாளியான உங்கள்மீது நிறைய வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன; உங்களுக்கு எப்படி காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியும்?” என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
உயர்நீதிமன்றமே, பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை முடிவு செய்திருக்கிறது.
எனவேதான், நீங்கள் முடிவு செய்யவேண்டியது எங்களுக்காக அல்ல – கூட்டணிக்காக அல்ல – உங்கள் எதிர்காலத்திற்காக – உங்கள் பிள்ளைகளுடைய கல்விக் காக – உங்கள் பிள்ளைகளின் வேலை வாய்ப்பிற்காக – சமூகநீதியைக் காப்பாற்றுவதற்காக – எல்லாவற்றையும் தாண்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட, எதேச்சதி காரத்தை வீழ்த்திட, மக்களுடைய உரிமைகளை நிலைநாட்டிடவேண்டும் என்பதற்காகத்தான்.
இராபர்ட் புரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்!
வருகின்ற 19 ஆம் தேதியன்று நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று, இந்தியா கூட்டணியின் சார்பாக நிறுத்தப்பட்டு இருக்கின்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பெருமைப்படுத்தப்பட்ட அருமையான வேட்பாளர் இராபர்ட் புரூஸ் அய்யா அவர்கள் இங்கே வேட்பாளராக நிற்கிறார். அவர்களுடைய சின்னம் ‘‘கை” சின்னம்.
எனவே, ‘‘கை கொடுப்போம் என்றால், ஜனநாயகத் திற்கே கை கொடுப்போம்” என்று அதற்குப் பொருள்.
ஆகவே, அந்த வாய்ப்பை நீங்கள் உருவாக்கவேண் டும். நிச்சயமாக, வெற்றி விழா கூட்டத்திலும் நாங்கள் கலந்துகொள்வோம். உங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
மறவாதீர் கை சின்னம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையில் சிறப்புரையாற்றினார்.
தேர்தல் பத்திரமோ ‘‘பத்திரம்!”
ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்வார்கள்,‘‘The tip of the iceberg” என்று – அதாவது ‘‘பனிப்பாறையின் முனை” என்று சொல்வார்கள். அது மட்டும்தான் இப்பொழுது தெரிந்திருக்கிறதே தவிர, மிகப்பெரிய பாறை உள்ளே இருக்கிறது; மலையே உள்ளே இருக் கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே அந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி சொன்ன வார்த்தையை இங்கே சொல்லுகிறேன்,
ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஊக்குவிப்பதாக உள்ளது தேர்தல் பத்திரத் திட்டம்!
‘‘ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பதற்குப் பதிலாக, அவற்றை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் உள்ளது. திட்டங்களின் நோக்கம் வேண்டுமானால் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், விளைவுகள் நேர் மாறாக உள்ளன” என்று நீதிபதிகள் கருத்துத் தெரி வித்தனர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, ‘‘இந்தத் திட்டத்தை நீதிமன்றம் நிராகரித்தால், நிலைமை 2017-க்கு முன்பு இருந்த மோசமான நிலைக்குத் திரும்பும்” என்றார்.
நீதிபதிகளோ, ‘‘முன்பாவது ரூ.20,000-க்குமேல் கொடுப்பவர்களின் பெயர், முகவரி தெரியும். நிறுவனங் கள் கொடுக்கும் நன்கொடை அளவு (7.5%) வரையறுக் கப்பட்டு, யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தெரியும். ஆனால், இன்று எல்லாமே அநாமதேயமாக, ஆளுங்கட்சிக்கு மட்டும் தெரியக்கூடிய ‘மூடுமந்திர மாக’ உள்ளது,” என்றனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன கட்சிக்காரர்களா? அல்லது ஒரு சார்பு உள்ளவர்களா? இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதற் காகத்தான் இப்படிப்பட்ட சிறிய புத்தகங்களை அச் சிட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம். அதனை வாங்கிப் படியுங்கள்!
இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே இரண்டு தேர்தல்கள்தான் மிகவும் முக்கியமானவை.
‘‘தேர்தல் பத்திரம், தேர்தல் பத்திரம்” என்று அவர் கள் சொன்னார்கள். இப்பொழுது நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால், ‘‘தேர்தல் பத்திரமாக நடக்க வேண்டும்” என்று.
தேர்தல் பத்திரமாக நடக்கவேண்டும்; தேர்தலில் நேர்மை இருக்கவேண்டும்; ஒன்றிய அரசால் நியமிக் கப்பட்ட தேர்தல் ஆணையர் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார். உடனடியாக இரண்டு பேரை நியமிக்கின்றனர்.
தேர்தல் நியாயமாக நடக்கவேண்டும் என்று ஏன் சொல்கிறோம்? அறிவு நாணயம் அதில் உண்டு என்பதற்காகத்தான்.
– திருநெல்வேலி தேர்தல் பரப்புரையின்போது
தமிழர் தலைவர் ஆசிரியர்