நாகர்கோவில், ஏப். 1- குமரி மாவட்ட திராவிடர்கழக கலந்துரையா டல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய் யத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந் தன் முன்னிலை வகித்து தொடக் கவுரையாற்றினார்.
மாவட்ட தி.க துணைத்தலை வர் ச. நல்ல பெருமாள் மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு, ஆகியோர் கருத் துரை ஆற்றினர். மாவட்ட பக செயலர் பெரியார் தாஸ், மாவட்ட இளைஞரணி செயலா ளர் எஸ்.அலெக்சாண்டர், துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கன் னியாகுமரி கிளைக்கழக அமைப் பாளர் க.யுவான்ஸ், மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப் பாளர் இரா.கோகுல், கழகத் தோழர்கள் ச.ச.மணி மேகலை ஆகி யோர் உரையாற்றினர். மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்
தஞ்சையில் நடைபெற்ற திராவிடர்கழகப் பொதுக்குழு தீர்மானங்களை முழுமனதாக ஏற்று வரவேற்று குமரி மாவட் டத்தில் செயல்படுத்துவது, சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என பிரகடனப்படுத்த நூற் றாண்டு விழாக்களை சிறப்பாக நடத்தி முடிப்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக் கள் விரோத பாசிச பா.ஜ.க ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி கன்னியாகுமரி தொகுதி வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களையும் விளவங் கோடு தொகுதி இடைத் தேர்த லில் வெற்றி வேட்பாளர் தாரகை கத்பட் அவர்களையும் பெருவாரி யான வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றிபெற வைக்க கடுமையாக உழைப்பது உள்ளிட்ட சிறப் பான தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன