புதுடில்லி,மார்ச்.31- ஒன்றிய விசா ரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படு வதாக 1ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் முறையிட திரிணாமுல் காங்கி ரசுக்கு நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழு டில்லியில் தேர்தல் ஆணையம் அலுவலகத்துக்கு சென்றது.
அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், மேற்கு வங்காள அமைச்சர் சசி பாஞ்சா, நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென்.சாகேத் கோகலே, சகாரிகா கோஸ் ஆகியோர் குழுவில் இடம் பெற்றனர்.
தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க ஏப்ரல் 1-ஆம் தேதி நேரம் ஒதுக்கீடு பெற்றனர்.” பின்னர், வெளியே வந்து மேற்கு வங்காள அமைச்சர் சசி பாசா செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம் கட் டுப்பாட்டில் அதிகாரிகள் வந்துள் ளனர். அதன்பிறகு டில்லி -முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது களால் நாங்கள் மன உளைச்சல் அடைந்துள்ளோம்.
ஒன்றிய விசாரணை அமைப் புகள், எதிர்க்கட்சிகளை வேட்டை யாட தவறாக பயன்படுத்தப்படு கின்றன. மேற்கு வங்காளத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும் ‘அழைப்பாணை’ அனுப் பப்படுகிறது. இதனால் தேர்தல் பிர சாரப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு தனது அதிகா ரங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இதுதொடர்பான எங்கள் கவலை களை முறையிட தேர்தல் ஆணையத் திடம் நேரம் கேட்டோம். ஏப்ரல் 1ஆம் தேதி. தலைமை தேர்தல் ஆணை யர் மற்றும் தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.