தீர்வு
தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணும் ‘சி விஜில்’ செயலி மூலம் கடந்த 14 நாள்களில் 79,000 புகார்கள் பெறப்பட்டு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்.
நோட்டீசு
சென்னை மாவட்டத்தில தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1500 ஊழியர்களிடம் பயிற்சியில் பங்கேற்காதது ஏன் என்று விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அலுவலகம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
கோரிக்கை
நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட நாள் ஊதியத்தை ரூ.600- ஆகவும், வேலை நாள்களை 200 ஆகவும் உயர்த்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.
வரி செலுத்த…
அரசியல் கட்சிகள் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என்ற விதி உள்ளதாக மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெளிவுபடுத்தி உள்ளார்.
பேருந்துகள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏப். 17, 18 தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல்.
குறைந்தது
கருநாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அணைகளில் நீர் இருப்பு முந்தைய ஆண்டுகளை விட கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment