ஆசிரியர் விடையளிக்கிறார்

2 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: ஸநாதனத்தைப்பற்றி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனவா தி.க.வும், தி.மு.க.வும்?

– பா.முகிலன், சென்னை-14

பதில் 1: இல்லை. ‘செமிகோலன்’ – போட்டுள்ளன! இவ்வளவு அக்கறை காட்டும் உங்களைப் போன்றோரின் பங்கு அதில் என்ன?

கேள்வி 2: குடியரசு தினத்தன்றாவது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கொடியேற்ற விடுவார்களா?

– மீ.வேழவேந்தன், வடலூர்

பதில் 2: எந்த வித்தைகளையும் – இந்த ஆட்சியில் – எப்போதும் அவர்கள் நினைத்தால்  மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும்.

கேள்வி 3: சிறார்கள் மற்றும் முதியவர்களுக்கான ரயில்வே சலுகை ரத்து செய்யப்பட்டதால் 10,000 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தி உள்ளதாக ஒன்றிய அரசு கூறுகிறதே?

– ம.மணி, திருவள்ளூர்

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 3: சமூக நலனை ‘பலி கொடுத்து’ மிச்சப்படுத்துதல் – சரியான – பொறுப்பான – செயலாக இருக்க முடியாது! சீனியர் சிட்டிசன் சலுகை, சிறார் சலுகை – உலகம் முழுவதிலும் பற்பல நாடுகளின் மனிதநேயம் பொதிந்த சலுகைகளாகும். அவற்றை மறுத்து இப்படி ‘மிச்சமா?’ பெருந்தவறான பொருளாதாரக் கணக்கீடு!

கேள்வி 4: கனடா – இந்தியா சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் வேலை தேடி மற்றும் கல்விக்காக சென்ற நடுத்தர மக்கள்தானே? அவர்களுக்கு மோடி என்ன பதில் வைத்துள்ளார்?

– க.பழனி, செஞ்சி

பதில் 4: அவர் சொல்ல வேண்டிய பதிலை – எம்மிடம் கேட்பது நியாயமா?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 5: அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்கிறார்; செல்லூர் ராஜூவோ கூட்டணி இருக்கிறது என்கிறார்; யார் சொல்வது உண்மை?

– ந.இளங்கோ, கன்னியாகுமரி

பதில் 5: எல்லோரையும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியார் வாய்மூடச் சொல்லிவிட்டாரே! – லேட்டஸ்ட் செய்தி தெரியாதா? 

கேள்வி 6: பல லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டு, விநாயகன் பொம்மைகள் வைக்கப்படுகின்றன; பிறகு அவை தண்ணீரில் கரைக்கப்படுகின்றனவே, இதனால் யாருக்கு, என்ன லாபம்?

– எ.ரமேஷ், திருவண்ணாமலை

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 6: கடவுளைச் “செய்து” கரைக்கும் மதம் இந்த மதம் அல்லாமல் உலகில் எந்த மதம்? என்று கேட்காதீர்கள் – பா.ஜ.க. பாய்ந்து பிராண்டிட மேலே விழும். எல்லாம் வள்ளலார் கூற்றுப்படி ‘பிள்ளை விளையாட்டு!’

கேள்வி 7: இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு  (கருநாடக மாநிலம்) தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரைத் தர மறுக்கிறதே, ஏன்?

– சே.செல்வம், கள்ளக்குறிச்சி

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 7: கூட்டணிக்கும், அவர்களது நிலைப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம்? புரியாமல் கேட்காதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை – ஒருங்கிணைப்புதான் ‘இந்தியா’ கூட்டணி – ஒரே பொதுநோக்கு, பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே!

கேள்வி 8: ஸநாதனம் என்றாலும் சரி, நீட் பிரச்சினை என்றாலும் சரி  உடனுக்குடன் அமைச்சர் உதயநிதி கருத்து தெரிவிப்பது எதைக் காட்டுகிறது?

– த.வெங்கடேஷ், திருச்சி

பதில் 8: அவரது ஆற்றலையும், கொள்கைத் துடிப்பையும், சரக்குள்ளவர் என்பதையும் காட்டுகிறது! 

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 9: மாநில அமைச்சருக்கே கேரளாவில் உள்ள கோவிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதே?

– ப.கன்னியப்பன், மாமல்லபுரம்

பதில் 9: ஸநாதனம் எங்கே என்று கேட்பவர்களுக்குக் கேரள ஸநாதனிகளின் அழுத்தமான பதில் அங்கே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *