கோயம்புத்தூர், மார்ச் 27 – இடஒதுக்கீட்டில் படித்தவர்களை இழிவுபடுத்தும் வகையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டிக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. தனது பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் றாலே பொய், பித்தலாட்டம், மோசடி, இழி வான பேச்சு என்பதாகி விட்டது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை, சுதந்திரப் போராட்ட வீரர் எனக் கூறியது தொடங்கி, 1680 ஆம் ஆண்டே இறந்து போன சத்ரபதி சிவாஜி, 1967 இல் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார் என்று கூறியது, 1963 ஆம் ஆண்டே தனது 9 ஆண்டுகால முதலமைச்சர் பதவியை விட்டு காமராஜர் விலகிவிட்ட நிலையில், 1963 முதல் 1975 வரை 13 ஆண்டுகள் காமராஜர் முதல மைச்சராக இருந்தார் என்று கூறியது, உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தார் என கூறியது… இப்படி அண்ணாமலையின் ‘அக்மார்க்’ உளறல்கள் ஏராளம்.
இந்நிலையில், அடுத்த பொய்யை எடுத்து விட்டுள்ளார். பொய் மட்டுமல்ல, இடஒதுக் கீட்டின் ‘கோட்டாவில் வந்தவன் அல்ல நான்’ என்று பேசி, இட ஒதுக்கீட்டில் வந்தவர் களை இழிவுபடுத்தியுள்ளார். இது தற்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25-3-2024 ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண் ணாமலை, அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை விமர்சித்தார்.
அப்போது, “சிங்கை ராமச்சந்திரன், அவங்க அப்பாவின் எம்.எல்.ஏ. கோட்டா சீட்டை பயன்படுத்தி கல்லூரியில் படித்தவர். ஆனால், இந்த அண்ணாமலை கோட்டா சிஸ்டத்துல வரலை” என்றார்.
“2002-இல் முதன் முதலாக நான் கோவைக்கு வந்தேன். பேண்ட் போட்டுகிட்டு எங்கப்பா வேட்டி கட்டிகிட்டு கிராமத்தில் இருந்து 2 தகர டப்பாவை எடுத்துகிட்டு 3 பேருந்து மாறி 2002 இல் கோவைக்கு வந்தேன். இது 22 ஆண்டுகளுக்கு முன்பு. அன்றைக்கு எனக்கு வயது 17. காந்திபுரம் பேருந்து நிலையத்தில், பேருந்தைப் பிடித்து 2 தகரப் பெட்டியோடு பீளமேடு போய் இறங் கினேன். பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி முன், நானும் என்னுடைய தந்தையும் 2 தகரப் பெட்டியை வைத்துக் கொண்டு நின் றோம். நான் ஒண்ணும் கோட்டா (னிuஷீtணீ) சிஸ்டத்துல சீட் வாங்கல.. கோட்டா சிஸ்டத் துல இந்த அண்ணாமலை வரலை.. கோட்டா சிஸ்டத்துல வானதி அக்கா வரலை.. கோட்டா சிஸ்டத்துல மோடி வரலை.. கோட்டா சிஸ்டத் துல இங்க யாரும் வரவில்லை..” என்று கூறி யுள்ளார்.
அய்.பி.எஸ். ஆனதே கோட்டாவில் தான்!
இதுதான் தற்போது கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது. நான் இடஒதுக்கீட்டில் படிக்க வில்லை என்று அண்ணாமலை கூறியிருக் கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், 2010 ஆம் ஆண்டு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டுப் பிரிவில்தான் அய்பிஎஸ் பணியிலேயே அண்ணாமலை சேர்ந்துள்ளார். ஆனால், அதை மறைத்து, கோட்டா (னிuஷீtணீ) சிஸ்டத் தில் நான் வரவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசியுள்ளார்.
அடுத்ததாக, ‘கோட்டா சிஸ்டத்துல இந்த அண்ணாமலை வரலை..’ என்று கூறியதன் படி, இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் மீதான தனது இழிவான பார்வையை வெளிப்படுத்தி கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்கு தற்போது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அண் ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அய்பிஎஸ் பதவி கிடைத்ததே ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) எனும் கோட்டாவில்தான் என்பதற்கான ஆதாரங் களை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அண்ணாமலையின் பொய்யை அம்பலப் படுத்தியுள்ளனர். இடஒதுக்கீடு என்ற கோட் டாவில்தான் படித்தேன் என்று அண்ணா மலையே முன்பொரு பேட்டியில் கூறியிருந்த காட்சிப் பதிவும் தற்போது வைரலாகியுள்ளது.