வெள்ள நிவாரண நிதி தருவதாக தொலைபேசியில் கூறிய பிரதமர் ஏமாற்றி விட்டார்

viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோவில்பட்டி,மார்ச் 27- வெள்ளப் பாதிப்புகளுக்காக நிதி தருவதாக தொலைப்பேசியில் தெரிவித்த பிரதமர் மோடி, பின்னர் ஏமாற்றி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டய பு ரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் 26.3.2024 அன்று இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில், தூத்துக்குடி தொகுதி வேட்பா ளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகி யோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத் துக்கு தங்களின் உயிரையும், உட லையும் அர்ப்பணித்த தியாகிகள் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். ஒருவகையில் இப்போது நடப்பதும், சர்வாதிகாரியிடம் இருந்து ஜனநாய கத்தை மீட்பதற்கான விடுதலைப் போராட்டம்தான்.

தூத்துக்குடியில் மக்களுடன் மக்களாக கனிமொழி வாழ்ந்தார், உழைத்தார், போராடினார். உங்க ளுக்காக நாடாளுமன்றத்தில் முழங் கினார். மழைவெள்ளம் ஏற்பட்ட போது, அவரே தண்ணீரில் இறங்கி, மக்களுடன் மக்களாக நின்று, நிவா ரணப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால், தூத்துக்குடி மக்களின் பிரதிநிதியான கனிமொழியை மேடை யில் பிரதமர் அவமதித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில், தூத் துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதை மறக்கமுடியுமா? ஆனால், இந்த நிகழ்வை தொலைக் காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல மைச்சர் பழனிசாமி கூறினார். அவர் கூறியது பொய் என்பதும், பழனிசா மிக்கு தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்பதும், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக் கையில் தெரிந்துவிட்டது.

பழனிசாமி நேற்று யாருடன் இருந்தார்? இன்று யாருடன் இருக்கி றார்? நாளை யாருடன் இருப்பார்? தமிழ்நாட்டின் உரிமைகளை எப் படியெல்லாம் அடகு வைத்தார்? எப்படி என்னைப் பற்றி அவதூறுக ளைப் பரப்பினார்களோ, அதே போல இப்போது உதயநிதியையும், பழனிசாமி விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால், பாஜகவைக் கண்டித்தோ, விமர்சித்தோ ஒரு வார்த்தைகூட பேசவில்லையே?
தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யா மல், தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றா மல், ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் கூறுகி றார். ஒரே ஒரு சிறப்புத் திட்டத்தைக் கூட, 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடியால் கூற முடிய வில்லை.
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த போது, டில்லியில் இருந்து என்னிடம் பேசிய பிரதமர் மோடி, ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி இருக்கிறேன், அவர் பார்வையிட்ட பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப் படும்’ என்று கூறினார்.

பிரதமர் பதவியில் இருப்பவர் கூறி னாரே என்று நம்பினேன். ஆனால், வாக்குறுதி அளித்தபடி நிதியைத் தரவில்லை. வழக்கமாக, மக்களுக்குக் கூறும் பொய்யைத்தான் எனக்கும் பரி சாகக் கொடுத்துள்ளார் மோடி. அவ ருக்கு தூத்துக்குடியிலும், ராமநாதபுரத் திலும் தோல்விப் பரிசு தயாராகிவிட் டது. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டா லின் பேசினார்.
முன்னதாக, 26.3.2024 அன்று காலை தூத்துக்குடி தினசரி சந்தையில், வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *