வெள்ள நிவாரண நிதி அளிக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் நெல்லை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

viduthalai
2 Min Read

திருநெல்வேலி,மார்ச் 26- தமிழ் நாட்டுக்கான வெள்ள நிவா ரண நிதியை வழங்க கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என, திருநெல்வேலியில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பா ளர் ராபர்ட் புரூஸ், கன்னியா குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட் பாளர் தாரகை கத்பட் ஆகி யோருக்கு ஆதரவு கேட்டு, நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒரு வர் பிரதமராவது உங்கள் கைகளில்தான் உள்ளது. பிர தமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந் தியா அமளியான இந்தியா வாகிவிடும். தேர்தல் வந்ததால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் அடிக்கடி வருகிறார்.
மோடி அவர்களே, வெள் ளம் வந்தபோது எங்கே இருந் தீர்கள்? தமிழ்நாட்டை இயற் கைப் பேரிடர் தாக்கியபோது, ஒரு பைசா கொடுத்தீர்களா? மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தீர்களா?

ரூ.37 ஆயிரம் கோடி

பேரிடரால் பாதிக்கப்பட் டவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 37 ஆயிரம் கோடி ஒன்றிய அரசிடம் கேட்டோம். உரிமையோடு நாம் கேட்கும் தொகையை தராமல் உள்ளனர்.
எனவே, தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளோம். நிதியையும் தராமல், மக்களை ஏளனமா கவும் பேசுகிறார்கள்.

தமிழர்களை பிச்சைக்காரர் கள் என்கிறார் ஒரு ஒன்றிய அமைச்சர். மற்றொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிர வாதிகள் என்கிறார்.
பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம். எதிர்கால சந்ததி யினருக்கு செய்யும் துரோகம். தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு கொண்டுவந்த சிறப்பு திட் டங்கள் என்ன? கடந்த 10 ஆண்டுகளாக என்ன சாதித் தீர்கள்? மத்தியில் ஆட்சியில் திமுக பங்கேற்றபோது, தமிழ் நாட்டுக்கு பல சிறப்பு திட்டங் களை கொண்டுவந்தது.

ஒன்றிய அரசு நிதியில் 18 சதவீதத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தோம். தமிழை செம்மொழியாக்கினோம். செம்மொழி தமிழாய்வு மய் யத்தை சென்னையில் அமைத் தோம்.
பிரதமர் மோடியின் அள வுக்கு தமிழ்நாட்டை வஞ்சித்த, வெறுத்த பிரதமர் வேறுயாரும் இருக்க முடியாது. 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்தது நீங்கள் தான். மீனவர்கள் தாக்குதலை தடுக்க முடிவில்லையே.
இலங்கையைப் பார்த்து பயப்படுகிறீர்களா?

நாடு இப்பேர்ப்பட்ட பேரா பத்தில் சிக்கித் தவிக்கிறது. இதைப்பற்றி கவலையில்லா மல் பழனிசாமி நாடகமாடு கிறார்.
பாஜக ஆட்சியின் அவலங்களை அவர் கண்டித்துப் பேசுவதில்லை.
பாஜகவுக்கு எதிரான வாக் குகளை பிரிப்பதற்காகவே அதிமுகவும், பாஜகவும் கள் ளக்கூட்டணி வைத்துள்ளன. பழனிசாமி தமிழ்நாடு மக்க ளிடம் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடமும் செல் வாக்கு இழந்துவிட்டார்.

-இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்ன ரசு, மனோதங்கராஜ், மாவட்ட செயலாளர்கள் மகேஷ், ஆவு டையப்பன், டி.பி.எம்.மைதீன் கான், ஜெயபாலன், நாடாளு மன்ற உறுப்பினர் ஞானதிர வியம், சட்டமன்ற உறுப்பி னர்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், ராஜேஷ், பிரின்ஸ், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *