கிருஷ்ணகிரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.9.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கேற்றது குறித்து கேட்டறிந்தார். உடன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறப்பு திட்ட அமலாக்கத் துறை செயலாளர் மரு.தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு ஆகியோர் உள்ளனர்.