கருநாடகத்தில் குழப்பம் தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்குகிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் ஈஸ்வரப்பா

1 Min Read

பெங்களூரு, மார்ச் 24- கருநா டக மேனாள் துணை முதலமைச் சரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா தனது கருத்துக ளாலும் நடவடிக்கைகளாலும் எப்போதும் பரபரப்பை கிளப் புவார்.
கடந்த ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து விலகப்போவதாக எச் சரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து, தன்னுடைய முடிவை கைவிட் டார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தனக்கு அல்லது தன் மகன் காந்தேஷூக்கு சீட் வழங்க வேண்டும் என கோரினார்.
ஆனால் ஷிமோகா தொகுதி யில் மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராக வேந்திராவுக்கு சீட் வழங்கப் பட்டது.
அதனால் கோபமடைந் துள்ள ஈஸ்வரப்பா கடந்த இரு நாள்களாக தன் ஆதரவாளர் களுடன் ஆலோசனை நடத் தினார்.
இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறுகையில்,
”எனக்கு எதிராக எடியூரப்பா சதி செய்கிறார். என் மகனுக்கு சீட் வழங்காமல் அவரது மக னுக்கு சீட் வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்வதாக கூறும் பாஜக தலை வர்கள் எடியூரப்பாவின் வாரிசு அரசியலை கேள்வி கேட்ப தில்லை. ஒரு மகனுக்கு (விஜயேந் திரா) கட்சியின் மாநில‌ தலைவர் பதவி, இன்னொரு மகனுக்கு (ராகவேந்திரா) நாடாளுமன்ற உறுப்பினர் சீட் கொடுத்திருக் கிறார். தனக்கு நெருக்கமான ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலா ஜேவுக்கு பெங்களூரு வடக்கு தொகுதியை ஒதுக்கி யுள்ளார்.
இன்னொரு ஆதரவாளர் மேனாள் முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மைக்கு ஹாவேரி தொகுதியை வாங்கி தந்திருக் கிறார். என்னை புறக்கணிக்கும் எடியூரப்பாவுக்கு பாடம் கற் பிக்க முடிவெடுத்துள்ளேன்.
ஷிமோகாவில் அவரது மகன் ராகவேந்திராவுக்கு எதி ராக நான் சுயேச்சையாக போட் டியிட முடிவெடுத்துள்ளேன்.
இதனால் என்னை பாஜகவில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை. எனக்கு தொண்டர் பலம் இருப்பதால் நிச்சயம் வெற்றிப் பெறுவேன். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *