கொல்கத்தா, மார்ச் 24- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப் பதற்கு மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா கடும் கண் டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதி வில்,
“மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சரான அர விந்த் கெஜ்ரிவால் கைது செய் யப்பட்டிருப்பதை வன்மையா கக் கண்டிக்கிறேன். எனது அசைக்க முடியாத ஆதரவை யும் ஒற்றுமையையும் தெரிவிக் கும் நோக்கில், சுனிதா கெஜ்ரிவாலிடம் தனிப்பட்ட முறை யில் பேசினேன்.
எதிர்க்கட்சி முதலமைச்சர் கள் வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டு கைது செய் யப்படுகிறார்கள். அதேநேரத் தில், சிபிஅய், அமலாக்கத் துறை ஆகியவற்றால் குற்றம் சாட்டப் பட்ட நபர்கள், பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தண்டிக்கப்படு வதில்லை.
அதோடு, முறைகேடுகளைத் தொடரவும் அவர்கள் அனும திக்கப்படுகிறார்கள். ஜனநாய கத்தின் மீதான மூர்க்கத்தன மான, அப்பட்டமான தாக்கு தல் இது.
நமது “இந்தியா” கூட்டணி தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தனது கடுமை யான எதிர்ப்பை தெரிவிக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேண்டுமென்றே எதிர்க்கட் சித் தலைவர்கள் கைது செய்யப் படுவது குறித்து முறையிடும்.
தேர்தல் ஆணையத்துட னான இந்த முக்கிய சந்திப்பில் பங்கேற்க, திரிணமூல் காங் கிரஸ் தரப்பில் டெரெக் ஓ பிரையன், முகம்மது நடிமுல் ஹாக் ஆகியோரை நியமித்துள் ளேன்” என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் கண்டனம்
கெஜ்ரிவால் கைது செய்யப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான், “நீங்கள் கெஜ்ரிவாலை கைது செய்ய லாம்.
அவரது சிந்தனையை எவ் வாறு கைது செய்ய முடியும். கெஜ்ரிவால் தனி நபர் அல்ல. அவர் ஒரு சிந்தனை; கொள்கை. அவருக்கு ஆதரவாக நாங்கள் பாறையைப் போன்று நிற் போம். புரட்சி ஓங்குக” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.
கெஜ்ரிவால் கைதுக்கு கண் டனம் தெரிவித்துள்ள காங்கி ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “ஜனநாயகத்துக்கு எதிரான இந்த வன்முறை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத் துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டில்லி முதல மைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது அரசி யல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.