பாராட்டு

viduthalai
2 Min Read

பெரியகுளம், மார்ச் 20- பெரியகுளம் கீழ வடகரை நூல கத்தில் பணிபுரியும் நூலகர் ராஜகோபால் பணிகளை பாராட்டி பதவி உயர்வு பெற்றதற்கு தேனி மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக சார்பில் நற்சான்று வழங்கி பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜெயராஜ், இபி முருகன், காமராஜர், வழக்குரைஞர் விஜயராஜ், காந்தி, இப்ராஹிம், பாச்சா, அறிவழகன், எழுத்தாளர் அருள், அழகு மணி, துரைப்பாண்டி மற்றும் புதிய ப.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியார் கொள்கைகளும் பகுத்தறிவு கருத்துகளும் நிகழ்சியில் உரை நிகழ்த் தினர். நிறைவாக பக பொறுப்பாளர் கருப்பணன் அரசு போக்குவரத்து கழகத் தோழர் நன்றி கூறினார்.

தேனி மாவட்ட பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல்
தேனி, மார்ச் 20- தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்து ரையாடல் காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பெரியகுளம் வடகரை யில் நடைபெற்றது.
வழக்குரைஞர் காமராஜ் அவர்களின் அலுவலகத் தில் பகுத்தறிவாளர் கழக நகர செயலாளர் ச.கிருஷ் ணமூர்த்தி தலை மையில் மாவட்ட ப.க. பொரு ளாளர் சே.கருப் பணன் பி.விஜய ராஜ் காந்தி, எம்.இப்ராஹீம் பாசா, அ.மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
ப.க. துணை தலைவர் இரா.பிரேம் சுதாகர் வர வேற்புரை ஆற்றினார். ப.க. ஒன்றிய செயலாளர் துரைபாண்டி சின்ன முத்து, பிரபு, அருண், அழகு, பிரதீப், வழக்குரைஞர் காமராஜ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப் பித்தனர்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழகப் பணிகளும் கொள்கைகளைப் பற்றி விளக்கி சிறப்புரையாற்றினார் ப.க. மாவட்ட செயலாளர் அ.மோகன் அவர்கள்.
கிராமபுரங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் பொறுப் பாளர்கள் தேர்வு செய்வது, மது பழக்கம் கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, துண்டறிக்கை அடிப்பது என தீர்மானங்கள் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் 6 பேர்களும் கழகத்தில் இணைத்துள்ளன. நிறைவாக ச.முருகன் ப.க. நகர பொருளாளர்  நன்றியுரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *