புதுடில்லி, சென்னையைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நாளை (மார்ச் 6) நடைபெறும் மாபெரும் மாணவர் பேரணியில் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 5- “தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்து, கல்வியைக் காப் போம்! பா.ஜ.க.வை நிராகரித்து, இந்தியாவைக் காப்போம்!” என்னும் முழக்கத்துடன் கடந்த ஆண்டு இந்தியா முழுமையும் உள்ள முக் கியமான மாணவர் அமைப்புகள் இணைந்து இந்திய மாணவர்களின் அய்க்கியம் (United Students of India) என்ற பெயரில் மாணவர் கூட்டமைப்பினைத் தொடங்கினர். இதில் காங்கிரஸ், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாணவர் அமைப்பு, ஆம் ஆத்மியின் மாணவர் அமைப்பு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மாணவர் அமைப்பு உள்ளிட்ட வடபுலத்தின் முக்கிய அமைப்புகள் இணைந்துள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மாணவர் களையும் ஒருங்கிணைக்கும் FSO-TN கூட்டமைப்பும், திராவிட மாணவர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி உள்ளிட்ட அமைப்புகளும் முதன்மை ஒருங் கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டமைப்பின் சார்பில் ஜனவரி 12 அன்று டில்லியிலும், பிப்ரவரி 1 அன்று சென்னையிலும் மாபெரும் பேரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக் கில் மாணவர்கள் பங்கேற்ற இப் பேரணிகள் பேரெழுச்சியை ஏற்படுத்தின.

இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நாளை (மார்ச் 6 அன்று) கல்லூரித் தெருவை ஒட்டிய பகுதியில் மாபெரும் பேரணி ஒருங்கிணைக் கப்பட்டுள்ளது.
இப் பேரணியில் தமிழ்நாட்டிலிருந்து திரா விட மாணவர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், சட்டக் கல்லூரி மாண வர் கழகப் பொறுப்பாளர் முகமது அஃப்ரிடி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்கின்றனர்.

மார்ச் 6 அன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் பேரணி, பிற்பகல் மூன்று மணி யளவில் மாபெரும் பொதுக் கூட்டத்துடன் நிறைவுபெறுகிறது. பொதுக் கூட்டத்தில் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் உரை யாற்றுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *