சென்னை, மார்ச். 3– ட்விட்டர் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இலட்சக்கணக்கா னோர் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாள் 1.3.2024 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதலமைச்சருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனால், ட்விட்டர் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் 1.3.2024 காலை முதலே டிரெண்டிங்கில் இருந்தது. இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலமைச்சர் பிறந்தநாள் ஹேஷ்டேக் தொடர்ந்து முதலிடம் பிடித்தது.
சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர், முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் ஹேஷ்டேக்-டிரெண்டிங்கில் முதலிடம்! ட்விட்டர் சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கானோர் வாழ்த்து!
Leave a Comment