டில்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 25- தலைநகர் டில்லியில் வரும் மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ள நிலை யில் மொத்தமுள்ள தொகுதிகளை 4க்கு 3 என்ற வீதத்தில் பிரித்துக் கொள்ள இரண்டு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து உள்ளது.

மேலும் குஜராத், அரியானா, கோவா மற்றும் சண்டிகரிலும் இரு கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளன. தலைநகர் டில்லியில் உள்ள 7 மக் களவைத் தொகுதிகளில் அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தெற்கு டில்லி , மேற்கு டில்லி , கிழக்கு டில்லி மற்றும் புது டில்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மீதமுள்ள சாந்தினி சவுக், வடமேற்கு டில்லி மற்றும் வடகிழக்கு டில்லி ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் டில்லியின் மொத்த மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

குஜராத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி பரூச், பாவ்நகர் என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அரிரியானாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. குருஷேத்ரா தொகுதியை ஆம் ஆத்மி எடுத்துக் கொண்டுள்ளது. கோவா மற்றும் சண்டிகரில் உள்ள ஒரு மக்களவை தொகுதியை காங்கிரசுக்கு வழங்கி யுள்ளது. கோவாவுக்கு ஆம் ஆத்மி ஏற்கெனவே வேட்பாளரை அறிவித்திருந்தது. அந்த வேட்பாளர் திரும்பப் பெறப்படுவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்தை நடந்து வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்து உள்ளது. இண்டியா கூட்டணிக்கு இது வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு முதல் வெற்றி கிட்டியது.
இப்போது 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடுத்த நேர்மறை நகர் வாகப் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *