யானைபுகா அகழிகள் – அமைச்சர் மதிவேந்தன் பதில்

4 Min Read

சென்னை, பிப். 20- சட்டப்பேரவையில் கேள்வி – நேரம் பகுதியில் பதிலளித்த அமைச்சர் டாக்டர் பா.மதிவேந்தன், மனித விலங்கு மோதல்களைத் தடுக்க 3 சிறப்பு இரவு ரோந்துக் குழுக்கள் அமைத்தும், யானைபுகா அகழிகள் அமைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தார். சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வியும் அமைச்சர் டாக்டர் பா.மதிவேந்தன் அளித்த பதிலும் வருமாறு:-

P.R.G.அருண்குமார் : – (அ) கவுண்டம் பாளையம் தொகுதி, ஆனைகட்டி மற் றும் பெரியநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்: ஆனைகட்டி, பெரியநாயக் கன்பாளையம் பகுதிகளில் வனவிலங் குகள் வருகையைத் தடுக்க, அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க 3 சிறப்பு இரவு ரோந்து குழுக்கள் அமைத்தும், யானைபுகா அகழிகள் அமைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
P.R.G.அருண்குமார்: காட்டுப் பன் றிகளின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்த, பஞ்சாயத்து நிர்வாகமே சுட்டுக் கொல்லலாம் என கேரள அரசு அனு மதி வழங்கியுள்ளது. எனவே, கேரள அரசைப் போன்றே, தமிழ்நாடு அரசும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் டாக்டர் மா.மதிவேந் தன்: கோவை வனக் கோட்டத்தின் முக்கியப் பிரச்சினையாகவும், தினசரி நிகழ்வாகவும் மனித-விலங்கு மோதல் கள் அதிகளவில் ஏற்படுகின்றன. இந் நிகழ்வுகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், வேட்டைத் தடுப்புக் காவலர் மற்றும் யானை விரட்டும் காவலர் அடங்கிய 3 சிறப்பு இரவு ரோந்துக் குழுக்கள், Alpha, Beta, Gamma
என்ற பெயரில் அமைக்கப்பட்டு, தீவிர கண் காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேற்படி குழுக்களில் உள்ள 16 பணியாளர்கள் தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை தொடர் வனவிலங்குகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர்.
மேலும், தற்போது கூடுதலாக பெரிய நாயக்கன்பாளையம் வனச் சரகத்திற்கு 6 பணியாளர்கள் மற்றும் காரமடை வனச் சரகத்திற்கு 6 பணியாளர்கள் வீதம் வனவிலங்குகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர, காவல் துறை, மின்வாரியப் பணியாளர்களுடன்
வனத் துறைப் பணியாளர்கள் இணைந்து anti-depredation committee ஒன்று அமைக்கப்பட்டு, மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில், வன விலங்குகளின் நடமாட்டம், வன விலங்குகளின் குணா திசயம், பயிரிடும் முறையில் செய்ய வேண்டிய மாற்றம் மற்றும் தோட் டங்களின் மாற்றம் குறித்து தொடர்ச்சி யாக பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு புதிய முயற்சியாக ‘Thadam’
என்னும்WhatsApp குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் பகிரவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

இதைத் தவிர, கூடுதலாக இந்த நிதியாண்டில் 3 கி.மீ. தூரத்திற்கு யானை புகா அகழிகள் பராமரிக்கப்பட்டு, சூரிய மின்சக்தியில் இயங்கும் குடிநீர்த் தொட் டியும் அமைக்கப்பட்டுள்ளது.
யானைகளின் உணவுத் தேவையை வனத்திலேயே பூர்த்தி செய்யும் பொருட்டு NABARD திட்டத்தின்கீழ் சுமார் 25 இலட்சம் செலவில் 20,000 நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர, 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில் மனித விலங்கு மோத லைத் தடுக்க 8 கிலோ மீட்டர் தூரத் திற்கு ரூ.41 இலட்சம் மதிப்பீட்டில் யானை புகா அகழிகள் மற்றும் 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சூரிய மின்சக்தி வன உயிரின குடிநீர்த் தொட் டிகள் இப்பகுதியில் அமைக்கப்பட் டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் யானைகளைப்பற்றி கேட்டார். இத்தனை நடவடிக்கைகள் இந்த அரசால் மேற்கொள்ளப் பட்டி ருக்கின்றன என்பதை விரிவாகச் சொன் னால்தான் புரியும். இதைத்தவிர, சில உயிரிழப்பு ஏற்பட்டால் நிவாரணமாக கடந்த ஆட்சியில் 4 இலட்சம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத லமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்த வுடன் அதை அதிகப்படுத்தி 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தினார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு போன மாதம் ரூ.5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி கூடிய விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்ப தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காட்டுப்பன்றிகளைப் பொறுத்த வரையில், கேரள மாநிலத்தில் order வாங்கியதுபோன்று, தமிழகத்தில் order
வாங்க வேண்டுமென்றுதான் நிறைய பேர் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Wildlife Protection Act, 1972 வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இ-ன் படி, வன விலங்குககளை 6 விதமாக ஒரு அட்டவணை செய்து Schedule I to Schedule
வரைக்கும் வைத்திருக்கிறார கள்.
ஆனால், இப்போது அந்த Schedule இல் கடந்த ஏப்ரல் மாதம் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் டாக்டர் மா.மதி வேந்தன் பதிலளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *