சென்னை, பிப். 17- தமிழ் நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக் கான தனி நிதிநிலை அறிக்கை நிதிநிலை அறிக்கை வரும் தேதி தாக்கல் செய் யப்பட உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (16.2.2024) வேளாண் நிதி நிலை அறிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற னர்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம் சங்கள் குறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் 3ஆவது தனி வேளாண் நிதிநிலை அறிக்கை இது வாகும். இந்த நிலையில், நேற்று (16.2.2024) நடை பெற்ற முதலமைச்சருட னான ஆலோசனையில், சிறுதானிய இயக்கம். வேளாண் வளர்ச்சி திட் டம், எண்ணெய் வித்துக் கான சிறப்புத் திட்டம். உணவுதானிய உற்பத்தி, விவசாயிகளுக்கான இணைப்பு வழங்குதல், வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகம் உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைத்த வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றியும் விவா திக்கப்பட்டது.
வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து விவ சாய சங்க பிரதிநிதிகள் விவசாய இடுபொருள் விற்பனையாளர் சங்க பிரதிநிதி ஏற்றுமதியாளர் கள் ஆகியோருடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஏற் கெனவே ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது.