பாபர் மசூதி குவி மாடத்தை இடித்தவருக்கு பிஜேபியில் எம்.பி. பதவி : வைரலாகும் காட்சிப் பதிவு

2 Min Read

புதுடில்லி, பிப்.16 அயோத்தியில் பாபர் மசூதி குவிமாடத்தை இடித்த வருக்கு பாஜகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட் டுள்ளது. 1992இ-ல் இது தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு தற் போது மகாராட்டிராவில் வைர லாகி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு முன் அங்கிருந்த பாபர் மசூதி, கடந்த 1992 டிசம்பர் 6இ-ல் விஎச்பி நடத்திய கரசேவையில் இடிக்கப்பட்டது. இக்காட்சி அப் போது தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. இதில், பாபர் மசூதி குவிமாடத்தை இடித்த கரசேவகர்களில் ஒருவர் டாக்டர் அஜித் கோப்சடே என தெரிய வந்தது.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் மகாராட்டிராவில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும்
3 பேர் பட்டியலை அக்கட்சி (14.2.2024) அன்று வெளியிட்டது. இதில் அஜித் கோப்சடே பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பாபர் மசூதி குவிமாடத்தில் அஜித் நிற்கும் பழைய படம் வைரலாகி வருகிறது.

மகராட்டிராவின் பீட் மாவட் டம், கோல்ஹே பர்காவ்ன் கிரா மத்தை சேர்ந்த அஜித், 1992இ-ல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். தனது இளம் வயது முதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிர உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தொடங்கிய ரத யாத்திரையில் கலந்துகொண்ட அஜித், பாபர் மசூதியின் குவி மாடத்தை இடித்த இளைஞர்களில் ஒருவராக இடம்பெற்றார்.
இந்தப் படக்காட்சியுடன் இன்ஸ்டாகிராமில் அஜித் கடந்த ஜனவரி 22இ-ல் வெளியிட்ட பதி வில், “ராம் லல்லாவுக்கு கிடைத் துள்ள மரியாதை மகிழ்ச்சி அளிக் கிறது. இதன் கரசேவையில் பங்கு கொண்ட நான் பெருமை கொள் கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மே 2020-இல் மாநிலங்களவை தேர்தலில் போட் டியிட அஜித் வாய்ப்பு கேட்டி ருந்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு அளிக்கப்பட்டது. எனினும் மாநில மருத்துவப் பிரிவின் தலைவராக தொடர்ந்த அஜித்துக்கு தற்போது வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அஜித், கருநாடகாவில் அதிக முள்ள லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக அச் சமூகத்தின் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என பாஜக நம்புகிறது. கரசேவையில் கலந்துகொண்ட அஜித்தை போல், ராமன் கோயில் கட்டும் பணிக்கு முக்கியப் பங் காற்றியவர்களையும் பாஜக கவுர வித்திருப்பது தெரியவந்துள்ளது.

ராமன் கோயிலுக்காக ரத யாத்திரை தொடங்கி ஆதரவு திரட்டிய மேனாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காங்கிரஸ் தலைவராக இருப்பினும் பாபர் மசூதி இடிப்பை தடுப்பதில் சுணக்கம் காட்டி ராமன் கோயில் கட்ட பாதை வகுத்த மேனாள் பிரதமர் பி.வி.நரசிம்மரா வுக்கு பாரத் ரத்னா அறிவிக்கப் பட்டது. பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது உ.பி. முதலமைச்சராக இருந்தகல்யாண் சிங்கிற்கு அவரது மறைவுக்கு பிறகு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *