சென்னை,பிப்.15- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது;-
ஒன்றிய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோதப் போக் குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அரியானாவில் இருந்து 13.2.2024 அன்று தலைநகரை நோக்கி ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத் துடன் விவசாயிகள் பேரணி புறப்பட்டது.
அந்த பேரணியை முடக்குகிற வகையில் உத்தரப் பிரதேசம், அரியானா பா.ஜ.க. அரசுகள் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் பேரணி செல்லவிடாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள், பின்னப்பட்ட இரும்பு வலைகள் ஆகியவற்றை பல இடங்களில் அமைத்து பல்வேறு தடைகளை ஏற்படுத் தினார்கள். அதையும் மீறி பெருந் திரளான விவசாயிகள் பேர ணியில் திரண்டதை சகித்துக் கொள்ளாத பா.ஜ.க. அரசு, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மீது தடியடி நடத்தி பேரணியை சிதறடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண் டது.
இதன் மூலம் காவல் துறையினரின் அடக்கு முறையை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாய சங்கங்கள் தங்களது கோரிக்கைகளாக விளை பொருளுக்கு வழங்கப்படுகிற குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாயிகளின் விளைபொருள் கொள் முதலில் கார்பரேட்டுகளை அனுமதிக்கக் கூடாது, பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவா ரணம், மாதந்தோறும் குறைந்த பட்ச நிவாரணத் தொகை என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இது குறித்து மோடி அரசு விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை. பா.ஜ.க. அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தமிழ் நாடு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி தமிழ்நாட் டில் ‘பாரத் பந்த்’ வெற்றிகரமாக நடைபெற 77 மாவட்ட காங்கி ரஸ் கமிட்டிகளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கு மாறு அன்போடு கேட்டுக்கொள் கிறேன்.
விவசாயிகள் போராட்டம் என்பது தலைநகர் டில்லியோடு முடிவடைந்து விடாமல் அங்கே போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வரு கிறது. விவசாயிகள் பிரச்சினை என்பது நாட்டிலுள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களின் நலனை உள்ளடக்கியதாகும்.
எனவே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளோடு கலந்து பேசி அன்றைய நாள் அனைவரும் பச்சை துண்டை அணிந்து பாரத் பந்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வெளி யிட்டு, பொது மக்களிடம் விநி யோகம் செய்ய வேண்டுகிறேன். ‘பாரத் பந்த்’ வெற்றிகரமாக தமிழ்நாட்டில் நடக்க அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தீவிர முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள் கிறேன்.”
-இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.