சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் 3, ஜூனியர் டெக்னீசியன் அசிஸ்டென்ட் (உணவு பாதுகாப்பு) 7, ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் பிரிவில் உற்பத்தி 32, மெக்கானிக் 12, எலக்ட்ரிக்கல் 5, இன்ஸ்ட்ரூமென்டேசன் 5, மெக்கானிக் 2, எலக்ட்ரிக்கல் 2 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.2.2024 அடிப்படையில் 18 – 26, 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 26.2.2024
விவரங்களுக்கு: cpcl.co.in
டிப்ளமோ முடித்தால் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
Leave a Comment