டில்லி, பிப்.14 பீகார் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில மேனாள் துணை முதலமைச் சருமான தேஜஸ்வி யாதவ், செய்தியாளர் களிடம், ‘குஜராத்திகள் ஏமாற்றுக்காரர்கள், அவர்களது ஏமாற்று வேலைகள் அனைத்தும் மன்னிக்கப் பட்டுவிடும்’ என்று தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர்மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தனது கருத்துகளை திரும்பப் பெறுவதாகத் தேஜஸ்வி யாதவ் தரப்பில் உச்சநீதி மன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப் பட்டது. உச்சநீதிமன்றம் இதைப் பதிவு செய்து குஜராத்திகள் ஏமாற் றுக்காரர்கள் எனப் பேசியதாகத் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மணிப்பூரில் பழங்குடியினரை வெளியேற்ற பா.ஜ.க. தீவிரம்
இம்பால்,பிப்.14- பாஜகவின் வகுப்பு வாத அரசிய லால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 10 மாதங்களாக பற்றி எரிந்து வருகிறது. வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 200-அய் கடந்துள்ள நிலையில், பல ஆயிரம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வன் முறையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் கூடுதல் வன்முறையை உருவாக்கும் முனைப் பிலேயே செயலாற்றி வருகின்றன.
இந் நிலையில், கடத்தல் விவகாரத்தை காரணம் காட்டி மணிப்பூரில் வாழும் பழங் குடியினரை வெளியேற்ற ஆளும் பாஜக அரசு அடுத்தகட்ட சதி நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் கூறுகையில், “மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைக்கு காரணம் போதைப்பொருள் மாபியா மற்றும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள், குறிப்பாக மியான்மரில் இருந்து வந்த அகதிகளே ஆவர். இதனால் 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்தில் வந்து தங்கியிருக்கும் நபர்கள், அவர்களின் ஜாதி அல்லது சமூ கத்தைப் பொருட் படுத்தாமல் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப் படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
மியான்மர் அகதிகள் என்று பைரேன் சிங் குறிப்பிடுவது குக்கி இன பழங்குடி மக்களையே. குக்கி இன பழங்குடி மக்கள் மியான்மரில் வாழும் பழங்குடி மக்களின் தொப்புள் கொடி உறவுகள் போன்றவர் கள் என்ற நிலையில், நேரடியாக குக்கி இன மக்களை வெளியேற்றுவோம் என சொல்வ தற்குப் பதிலாக மியான்மர் அகதிகள் என்று முதலமைச்சர் பைரேன் சிங் மறைமுகமாகக் கூறியுள்ளார். முதலமைச்சர் பைரேன் சிங்கின் கருத்தை தொடர்ந்து மணிப்பூரில் அடுத்தகட்ட வன்முறை பதற்றம் உரு வாகியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்
புதிய வகை பறவைகள் வருகை
சென்னை, பிப்.14 கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் போது மான அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதைத் தொடர்ந்து பள் ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள், வாத்து இனங்கள் வந்து உள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்திற்கு கூடுதலாக பறவை இனங்கள் வந்து இருப் பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.