6.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு, ஜன நாயகப் படுகொலை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி: ஆதரவு 47; எதிர்ப்பு 29; பா.ஜ முயற்சி தோல்வி.
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி
* தனியார் வீட்டை மறித்து கல்லை நட்டு வைத்து சாமியாக்கும் மூட நம்பிக்கை முயற்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். உடனே அகற்றிட காவல் துறைக்கு உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என மோடி அரசு சொன்னது என்னாச்சு? பனாமா, பண்டோரா, பாரடைஸ் கசிவில் வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
* சிபிஅய்(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், பாஜக அரசியல் ஆதாயங்களுக்காக ராமரை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
தி இந்து:
* பட்டியலின ஜாதிகளில் உள் ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் ஒதுக்க முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப் பட்டது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment