7 மசோதாக்கள் பேரவையில் அறிமுகம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, அக். 11-  சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் களுக்கான ஓய்வூதிய உயர்வு, வணிகவரித் துறையின் சமாதான திட்டம் உள்ளிட்ட 7 சட்டத்திருத்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப் பட்டு, சமாதான திட்டம் உள் ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேற் றப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்  7 சட்டத்திருத்த மசோதாக்கள் அமைச்சர்களால் அறிமுகம் செய் யப்பட்டன. இந்தாண்டு ஜனவரி மாதம் 19ஆ-ம் தேதி சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், ‘ சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின் மேனாள் உறுப்பினர் களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத் தும் விதமாக, தமிழ்நாடு சம்பளங் கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான திருத்த சட்ட முன்வடிவை  அமைச்சர் துரைமுரு கன் அறிமுகம் செய்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 7 பல்கலைக்கழகங்களை சேர்ப்பது தொடர்பான பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் க.பொன்முடி அறிமுகம் செய்தார். 

ஆயத்தீர்வை: மேலும், மாநிலத் தின் வருவாயை பெருக்கும் வகை யில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது மீது விதிக்கப் படும் ஆயத்தீர்வையின் அதிகபட்ச தொகையை சாதாரண வகைக்கு ஒரு லிட்டருக்கு ரூ.250-லிருந்து ரூ.500-ஆகவும், நடுத்தர வகைக ளுக்கு லிட்டருக்கு ரூ.300 லிருந்து ரூ.600-க்கும், உயர்தர வகைகளுக்கு ரூ.500-லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தும் வகையிலான அரசின் முடிவுக்கு செயல்வடிவம் கொடுக் கும் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து பட்டுப்புழு விதை உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோ கம் தொடர்பான சட்டத்தில் பட்டு வளர்ச்சி மேம்பாடு மற்றும் விலை உறுதிப்படுத்தும் நிதியத்துக் காக அமைக்கப்பட்ட குழுவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகை யில் சட்டத்திருத்தம் செய்வதற் கான சட்ட முன்வடிவை அமைச் சர் தா.மோ.அன்பரசன் அறிமுகம் செய்தார்.

சமாதான திட்டம்: வணிகர்கள் சிரமங்களை தணிக்கவும், வரி வழக்குகளை குறைக்கவும், 2021 மார்ச் 31 அல்லது அதற்கு முன் செய்யப்பட்ட 2017-18 வரையிலான வரிக்கணிப்பு ஆண்டுகளுக்கு அர சுக்கு செலுத்த வேண்டிய வரி, அபராதம், வட்டி ஆகியவற்றின் நிலுவையை பெற வணிகர்களுக்கு வாய்ப்பு வழங் கும் சமாதான திட்டம் சட்டப்பேர வையில் கடந்த 2021-ல் அறிவிக்கப்பட் டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டா லின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு செயல்வடிவம் கொடுக்கும், சட்ட முன்வடிவை அமைச்சர் பி.மூர்த்தி  அறிமுகம் செய்தார்.

இதுதவிர, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங் களின் மேல் முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரத்தை கீழமை அலுவலர்களுக்கு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பதற் கான சட்ட முன்வடிவுகளையும் அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார்.

இதில், சமாதான திட்டம், ஜிஎஸ்டி சட்டத்திருத்தம், சீட்டு நிதி சட்டத்திருத்தம் ஆகியவற்றுக் கான சட்ட முன்வடிவுகளை நேற்றே ஆய்வு செய்து நிறைவேற் றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் முன்மொழிந்தார். இதைய டுத்து, மூன்று சட்டத்திருத்தங்களும் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *