வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி 17ஆவது ஆண்டு விழா – மழலையருக்கான பட்டமளிப்பு விழா

viduthalai
2 Min Read

வெட்டிக்காடு, பிப். 1- வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 17ஆவது ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில் 29.1.2024 அன்று மாலை 4 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் வரவேற்றனர்.
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கழக வேந்தர் முனைவர் வேலுச்சாமி, பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

மேலும் சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்ய பாரதி, வெட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி மைனர் மற்றும் ரெனாடஸ் பிரைவேட் லிமிªட் நிறுவன மேலாளர் அருண்பாண்டியன் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக இடம் பெற்று சிறப்பித்தனர்.

வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் அனை வரையும் பள்ளியின் முதல்வர் சு.சாந்தி வரவேற்றுப் பயனாடைகள் அணிவித்துச் சிறப்பு செய்தார்.
மழலையர் பிரிவில் பயிலும் (53 மாணவர்கள்) அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பட்டமளிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ரெ.போஸ்லி அனை வரையும் வரவேற்று வரவேற்புரை நல்கினார்.

பள்ளியின் முதல்வர் சு.சாந்தி பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளை, (2022-2023) செயல்பாடுகளை ஆண் டறிக்கையாக வாசித்தளித்தார்.
2022-2023ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சிக்கான காசோலை தலா ரூ.1000 ஆறு ஆசிரியர்களுக்கும், பத்து ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருவர், ஓட்டுநர், தூய்மைப் பணியாளர் ஒருவர் என நால்வருக்கு, தலா ரூ.10,000 காசோலையாக வழங்கியும் ஊக்குவித்து சிறப்பு செய் யப்பட்டது.
தேர்வில் முதல் மூன்று இடங்களுக்கான தரங்கள், தூய்மை, முழு வருகைப்பதிவு என விருதுகள், சான்றி தழ்கள் வழங்கி மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
முழு வருகைப்பதிவிற்காக கணித ஆசிரியர் மா.ரேகாவிற்கு சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சிறந்த பெற்றோருக்கான விருதும், பொங்கல் விழா விற்கு வருகை புரிந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசுகளும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
முனைவர் வேலுச்சாமி, மாணவர்களுக்கு பகுத்தறிவு பற்றிய அறிவுரைகள் வழங்கியும், பள்ளியில் அளிக்கப்பட்ட பரிசு, விருதுகளை வியந்து பாராட்டியும் மகிழ்வை வெளிப்படுத்தினார். பள்ளியின் பணியாளர் கள், பெற்றோர்கள், மாணவர்கள், முதல்வர் என அனை வரையும் பாராட்டி, நிறுவனத்தின் சிறப்பான செயல் பாட்டின் முறைகளை அவ்வப்போது அறிந்துள்ளேன் என்றும் பாராட்டினார்.

அடுத்ததாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளில் பரதத்துடன் வரவேற்பு மற்றும் மழலையர் மாணவர் களின் வரவேற்பு நடனங்களும் நிகழ்த்தப்பட்டன.
மழலையர், முதல் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலப் பாடலுக்கான நடனத்தை அளித்து மகிழ்வித்தனர்.
இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ‘அறிவுக்கு தடையே இலலை’ எனும் பாடல் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளை நடனத்துடன் வழங்கினர்.
மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பயிலும் அனைத்து மாணவர்களும் விழிப்புணர்வுடன் கூடிய கருத்துகளடங்கிய எட்டு பாடல்களுக்கு நட னங்கள் நிகழ்த்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

நாப்பிறழ் வாக்கியங்கள், வீதி நாடகம் (பெரியார் – ஜாதி தீ)பெரியார் பேச்சு (ஆங்கிலம்), அப்துல் கலாம் பேச்சு (தமிழ்).
காமராசர், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளு வர், அவ்வையார், கண்ணகி, ராஜராஜ சோழன் என ஒன்பது மாறு வேடங்கள் மூலம் கருத்துகளை விதைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *