வீட்டை சுத்தம் செய்வதற்கு மனைவியிடம்
ரூபாய் 74 ஆயிரம் கட்டணம் கேட்ட கணவர்
வீட்டில் ஓய்வில் இருந்தார் கணவர். வீட்டை சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார் மனைவி. சில மணி நேரங்கள் கழித்து அவருக்கு கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது. “உங்கள் வீடு 6 மணி நேரம் சுத்தம் செய்யப்பட்டது. கட்டணம் ரூ.73 ஆயிரத்து 955” என்று இருந்தது. இதைப் பார்த்த மனைவி ஆச்சரியம் அடைந்தார்.
“உங்கள் தூய்மைப் பணியால் மகிழ்கிறோம், ஆனால் கட்டணம் கிடையாது” என்று பதில் அனுப்பினார்.
இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்தது. அந்த கணவர் நிஜமாகவே சுத்தம் செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருபவர். அதனால் அவரது மனைவி உரிமையுடன் நம் வீட்டையும் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள் என்று கூறியிருந்தார். அதற்காக கணவர், தனது வழக் கப்படி கட்டண தொகையையும் மனைவிக்கு நகைச்சுவையாக அனுப்பி வைத்தார். அதை அவர் உரிமையுடன் நிராகரித்துவிட்டார்.
இந்த தகவலை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தபோது தெரி யவந்தது. ‘கட்டணம் கட்ட மறுத்த வாடிக்கையாளர்’ என்ற தலைப்பில் பேஸ்புக்கில் அந்த நபர், இதுகுறித்த பதிவை வெளியிட்டார்.
“கடந்த வாரம், ஒரு வாடிக்கையாளர் பணம் கொடுக்க மறுத்ததால், எங்களுக்கு மிகவும் இக்கட்டான சம்பவம் நடந்தது! ஒரு பெரிய மூலையில் சோபா, மூன்று படுக்கையறை விரிப்புகள் மற்றும் ஒரு கல் தரையை சுத்தம் செய்த பிறகு, வாடிக்கையாளர் மகிழ்ச்சிய டைந்ததாக எங்களுக்குத் தெரிவித்தார்! நல்ல செய்தி. ஆனால் கட்டணம் தர வில்லை” என்று அந்த பதிவில் எழுதி இருந்தார். இது வலைத்தள வாசிகளை வெகுவாக கவர்ந்தது.
இப்படியும் ஒரு செய்தி!
Leave a Comment