புதுடில்லி, அக் 12 ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ஆம் தேதியும், தெலுங்கானாவுக்கு நவம்பர் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, நவம்பர் 25-ஆம் தேதிக்கு ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்ட தேர்தல் வாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books