சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாஸ்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும். அறிவும், துணிவும், தனக்கென வாழாது தன்னல மறுப்பும் கொண்டவனே, பொது உடைமையையும், நாஸ்திகத்தையும் பயன்படும்படி எடுத்துச் சொல்ல முடியும். இவை இல்லாதவர்கள் அவற்றின் பேரால் பிழைக்கத்தான் முடியும்.
(“குடிஅரசு”, 23.10.1943