விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள்!

viduthalai
2 Min Read

‘கேலோ இந்தியா’ தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை, ஜன. 20- ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ் நாட்டை நிலைநிறுத்துவதே குறிக் கோள்’ என்று ‘கேலோ இந்தியா’ போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை ஜவஹர் லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று (19.1.2024) மாலை நடை பெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளைத்தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

எல்லார்க்கும் எல்லாம். அனைத் துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக் கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவது நம்முடைய குறிக்கோளாகும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகுசென்னை மாமல்லபுரத்தில் 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி, ஏடிபிசேலஞ்சர் டூர், சென்னை ஓப்பன் சேலஞ்சர், ஆட வர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டர்ஸ் (சதுரங்க வாகையர் பட்டப் போட்டி) போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தமிழ்நாட்டில் நடத்தியிருக்கிறோம்.
அதேநேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளையும் உலகத் தரத்துக்கு உயர்த்திக் கொண்டு வருகிறோம்.
தமிழர்களின் பண்பாட்டு அடை யாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங் கம்’ கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அந்த அரங்கத்தை 24ஆ-ம் தேதி நான் திறந்துவைக்க உள் ளேன். மணிப்பூரில் நிலவும் பிரச் சினைகளால் அங்குள்ள விளை யாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள, அவர் களை சகோதர உணர்வோடு தமிழ்நாட்டிற்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது தமிழ்நாடு அரசு. அவர் களில் சிலர், இந்த ‘கேலோ இந்தியா’ போட்டிகளில் பங்கேற் கிறார்கள்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சேர்க்கப்பட்டிருக்கிறது. ‘கேலோ இந்தியா’ 2023லோகோ-வில் வான் புகழ் வள்ளுவர் இடம் பெற்றிருக் கிறார். அந்தச் சிலை மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால், திருவள்ளு வருக்கு இந்திய நாட்டின் தென்முனை யில் வானுயர அமைக்கப்பட்டது. அதே போல், ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிராக போராடிய வீர மங்கை வேலுநாச்சியார் சின்ன மும் அதில் இடம் பெற்றிருப்பது நமக்குக் கூடுதல் பெருமை.

சுயமரியாதை மற்றும் தன் னம்பிக்கையை மேம்படுத்தி, எல் லோருடைய நல்வாழ்வுக்கும் விளை யாட்டு உதவுகிறது. விளையாட்டுத் துறையிலும், தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநில மாக உயர்த்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. பல்வேறுமாநிலங்களில் இருந்து பங்கேற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் களை வரவேற்று வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *