சென்னை, ஜன.9 – தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னை யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த் தக மய்யத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 7.1.2024 அன்று தொடங்கி வைத் தார். இந்த மாநா ட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறு வனங்களின் தலை வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 30,000 மேற் பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாடு நேற்று (8.1.2024) நிறை வடைந்ததை அடுத்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அனைவருக்கும் எல்லாம் என் பதன்படி தான் திமுக ஆட்சி நடை பெறுகிறது. பெண்கள் உள்பட அனை வரையும் உள்ளடக்கிய வேலை வாய்ப் புகளை உருவாக்குவ தில் முதலமைச்சர் மிக கவனத்துடன் இருந்தார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் ஒரு ட்ரில்லியன் டாலர் கனவு தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருதினார். வெளிநாடு களுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று விளக்கி கூறி முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈட்டி தந்தார்.
தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக் கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை அளிக்க வேண்டும் என்று கருதி முதலீடுகளை தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும், வடக்கு பகுதிகளிலும், சென்னையிலும் குவிய வைத்தோம். வரும் வாரத்தில் கூடுதலாக சில புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாக இருக்கிறது. இந்த முதலீடுகள் இரண்டு நாட்கள் மாநாடுடன் முடிவதில்லை. இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழ் நிலத்திற்கு வந்து சேரும். 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா விற்கும் செல்ல இருக்கிறார்.
தற்போது வரை 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள் ளன. ஆரம்ப முதலே எத்தனை லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்று முதல மைச்சர் எங்களிடம் கேட்கவில்லை. எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றே கேட்டு வந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு நின்றுவிடாமல், அவற்றை செயல் படுத்துவதில் இந்த அரசு களத்தில் நின்று பணியாற்றும்.
-இவ்வாறு தொழில்துறை அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
ஜப்பான் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை
ஜப்பான் நாட்டின் ஒசாகா மற்றும் கோச்சி நகரங்களுடன் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தி யாளர்களிடம் கூறுகையில்,
‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜப்பான் பயணத்துக்கு பிறகு அந்நாட் டின் முக்கிய நகரங்களுடன் பொருளா தார ரீதியான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. ஜப்பான் நாட்டினர் அதிக முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ளனர். ஜப்பான் நிறு வனங்களில் தமிழ்நாட்டுப் பெண்க ளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது’’ என்று கூறினார்.