செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரமாம்!

viduthalai
2 Min Read

– கருஞ்சட்டை –

1) மேஷ ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் “ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்”.
2) ரிஷப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் “ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யைஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ”.
3) மிதுன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம”.
4) கடக ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம”.
5) சிம்ம ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம”.
6) கன்னி ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம”.
7) துலாம் ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம”.
8) விருச்சிக ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “தரணி கர்ப்ப ஸம்பூதம்வித்யுத் காந்தி ஸமப்ரதம்குமாரம் சக்தி ஹஸ்தம்சமங்களம் ப்ரணமாம்யஹம்”.
9)தனுசு ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் “ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம”.
10)மகர ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம”.
11) கும்ப ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம”.
12)மீன ராசி – செல்வம் கொழிக்க சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம”.

-நியூஸ் 4 தமிழ் இணையம், 4.1.2024

சற்றும் வெட்கமில்லாமல் இப்படியெல்லாம் செய்தி வெளியிடுகிறார்களே, இவர்களை என்ன சொல்ல!
ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களும் இப்படி ஒரு வரி மந்திரத்தைச் சொல்லிவிட்டால், செல்வம் கொழித்துவிடுமாம்!
இப்படி செய்தியை வெளியிடும் ஏடுகள், இந்த ஒரு வரி மந்திரத்தைச் சொல்லி, ‘ராம நாமத்தை’ ஜெபித்து திண்ணையில் முடங்கிக் கிடக்கவேண்டியதுதானே! செல்வம்தான் கொட்டு கொட்டு என்று கொட்டுமே!
மக்களை சோம்பேறிகளாகவும், மூடர்களாகவும் ஆக்கத் தூண்டும் இத்தகையவர்களின் செயல்களைக் கிரிமினல் குற்றமாக்கி ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டாமா?
மூடத்தனத்தை மூலதனமாக்கி, தொந்தியில் சந்தனம் தடவி, சொகுசாக வாழும் இந்தச் சுரண்ட லுக்குப் பெயர்தான் ‘வைதீக தர்மம்’ – சாஸ்திரக் குப்பைகள்!
உஷார்! உஷார்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *