மக்களை நாயைப் போல அடியுங்கள்!

2 Min Read

பிஜேபி மராட்டிய அமைச்சர் காவல்துறைக்கு உத்தரவு

மும்பை, ஜன.6 தனது பிறந்த நாள் விழாவில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர் களை “நாயைப் போல அடியுங்கள் என காவல் துறையினருக்கு மராட்டிய மாநில அமைச்சர் அப்துல் சத்தார் மைக்கில் உத்தரவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டியத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவர் அப்துல் சத்தார். இவர் மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இவரது பிறந்தநாள் விழா 3.1.2024 அன்று இரவு அவரது தொகுதியான சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள சில்லாட்டில் நடந்தது. இதில் பிரபல நடன கலைஞரான கவுதமி பாட்டீலின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.
நடன நிகழ்ச்சியை காண அதிகளவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் ஆர்வ மிகுதியால் தொண்டர்கள் மேடை நோக்கி வர முயன்றனர். இதன் காரணமாக அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

‘நாயைப் போல அடியுங்கள்’
இதை கவனித்த அப்துல் சத்தர் பொதுமக்களை அமைதியாக உட் காருமாறு ஒலிபெருக்கியில் கூறினார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அவர் ஒலி பெருக்கியில் “அங்கு தேவையில்லாத வேலை செய்பவர்களை நாயைப் போல அடியுங்கள். எலும்பு நொறுங்கும் அளவுக்கு அவர் களின் கீழ் பகுதியில் அடியுங்கள்” என காவல்துறையினரிடம் கூறினார்.
மேலும் அவர் ஒரு பார்வை யாளரை பார்த்து,”உனது அப்பா இதுபோன்ற நிகழ்ச்சியை பார்த் திருப்பாரா?. நீ என்ன பேயா?. நீ மனிதனின் மகன். எனவே அது போல நடந்து நிகழ்ச்சியை பார். உட் கார்ந்து நிகழ்ச்சியை கண்டு களியுங்கள்” என்றார். இதையடுத்து காவல்துறையினர் கூட்டத்தில் லேசான தடியடி நடத்தினர். அமைச்சர் ஒருவர் மக்களை நாயை போல அடியுங்கள். எலும்பை உடையுங்கள் என ஒலிபெருக்கியில் காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சரின் இச்செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்நிகழ்வு குறித்து மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் -தான்வே கூறுகையில், “அப்துல் சத்தார் பயன்படுத்திய மொழி அவரது கலாச்சாரத்திற்கு ஏற்றது. அவரைத் தான் ஏக்நாத் ஷிண்டே அணியும், ஆளும் பா.ஜனதா கட் சியும் ஏற்றுக் கொண்டுள்ளன” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *