திருச்சி,அக்.19- ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு – பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கு விழா 20-10-2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை திருச்சி புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் மிக எழுச்சியுடன் நடைபெற உள்ளது
எழுச்சிமிகு விழாவிற்கான ஏற்பாட்டுப் பணிகள் திருச்சி மாநகரில் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மாநகரம் முழுவதும் ஓவியர் புகழேந்தி கைவண்ணத்தில் சுவரெ ழுத்து விளம்பரம் நடைபெற்று வருகிறது
நிகழ்ச்சி நிரல் சுவரொட்டிகள் வண்ண வண்ண நிறங்களில் அச்சிடப்பட்டு திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
தலைவர்களையும் தமிழ்நாடு முழுவதும் வருகை தரும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களையும் வரவேற்க நகர் முழுவதும் கழகத்தின் லட்சிய கொடியை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த எழுச்சிமிகு விழாவிற்கு அழைப்பு விடுத்து அமைச்சர் பெருமக்கள் தோழமை இயக்க தலைவர்கள் பொறுப்பாளர்கள் தோழர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் நேரில் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்
கழக மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி மாணவர் கழக தோழர்கள் திருச்சி மாநகரில் கடைவீதி வசூல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்
திருச்சி புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் மேடை அமைப்பு ,ஒலி ஒளி அமைப்பு, லிணிஞி அமைப்பு, கழகக் கொடி கட்டுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், திட்டமிடும் ஒருங்கிணைப்புப் பணிகளை 18-10-2023 அன்று இரவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ்,மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், திருச்சி மாநகரத் தலைவர் துரைசாமி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மலர்மன்னன், குப்துதீன் பகுதி செயலாளர் முபாரக் அலி, திருவெறும் பூர் இளங்கோவன், திருவரங்கம் முருகன், மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர் ஜெயில் பேட்டை தமிழ்மணி, மேனாள் மாவட்ட தலைவர் கணேசன் , ஆசிரியர் நடராஜன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்
தமிழ்நாடு தழுவிய அளவில் குடும்பத் துடன் வருகை தரும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்களை வரவேற்க திருச்சி மாவட்ட கழகம் ஆவலுடன் காத்திருக்கிறது
90 வயதிலும் ஈரோட்டுப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் பின்னே அணிவகுத்து அவர் காட்டும் திசை நோக்கி பயணித்து தந்தை பெரியார் பணி முடிப்போம் பணி முடிப்போம் அக்டோபர் 20 திருச்சியில் சங்கமிப்போம் வாரீர்! வாரீர்!! குடும்பம் குடும்பமாக வாரீர்!