உறுப்புக் கொடை உறுதிமொழி – உயர்கல்வி நிலையங்களுக்கு யுஜிசி கோரிக்கை

1 Min Read

புதுடில்லி, அக்.20 இணைய தளத்தில் உறுப்புக் கொடை உறுதி மொழி அளிக்க வசதி உள்ளது. இதுகுறித்து உயர் கல்வி நிறுவ னங்கள் பிரச்சாரம் செய்து, மாண வர்களை அதிக அளவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து பல் கலைக்கழக துணைவேந் தர்களுக் கும் யுஜிசி செயலர் மணீஷ் ஆர். ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வை அதிக ரிக்கும் வகையில் ஆண்டுதோ றும் இந்திய உறுப்பு நாளை கொண்டாடும் வகையில், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பை ஒன்றிய அரசு நிறுவி யுள்ளது. இதை யொட்டி, நாடு முழு வதும் ‘சேவா பக்வாடா’ எனப்படும் இணைய தளத்தில் உறுப்புக் கொடை உறுதிமொழி எடுத் துக் கொள்ளும் பதிவேடு தொடங்கப் பட்டுள்ளது.

https://notto.abdm.gov.in/Dledge-registrv  என்ற இணைய தளத்தில் இந்த பதிவேடு உள்ளது. விருப்பம் உள்ள வர்கள் உறுப்புக் கொடை உறுதி மொழியை இதில் பதிவு செய்யலாம். தேசியஉறுப்பு, திசு மாற்று அமைப்பின் இணைய தளம் (ஷ்ஷ்ஷ்.ஸீஷீttஷீ.னீஷீலீயீஷ்.ரீஷீஸ்.வீஸீ) மூலமாகவும் உறுதிமொழியை பதிவு செய்யலாம். உறுதிமொழி பதிவு செய்வதற்கான செயல் முறை, உறுப்புக் கொடை தொடர்பான தகவல்களை வழங்க 1800114770 என்ற கட்டணமில்லா உதவி எண்ணும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இணையதளத்தில் உறுப்புக் கொடை  உறுதிமொழி அளிக்க முடியும் என்ற தகவலை உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பு பிரச்சாரம் மூலம் மாண வர்களிடம் பரப்பி, அவர்களை அதில் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *