மயிலாடுதுறை, டிச. 23- மயிலா டுதுறையில் தமிழ்நாடு பார்ப்பன சங்கத்தின் 14ஆவது ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங் கள்: ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட எந்த இடஒதுக்கீட்டிலும் வராத முற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் உடனடி யாக அமல்படுத்த முதல மைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நலிந்த பார்ப்பன சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு உதவி செய்ய ஒரு தனி நலவாரி யம் அமைக்க, தமிழ்நாடு அர சிடம் கேட்டுக் கொள்ளப் படுகிறது. டி.என்.பி. எஸ்.சி., தேர்வில் மற்ற சமூகத்தினருக்கு கொடுக் கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு சலுகை போல் முற்படுத்தப்பட்ட சமூகத் தினருக்கு வயது உச்சவ ரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
தின்றுகொழுத்தது போதாதா? கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமாம்: பார்ப்பன சங்கத்தில் வலியுறுத்தல்
Leave a Comment