22.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* இரண்டாவது இந்தியா நடைப்பயணத்தை கிழக்கு மாநிலங்களில் இருந்து மேற்கு வரை ராகுல் தொடங்க காங்கிரஸ் செயற்குழுவில் வலியுறுத்தல்
* தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த மசோதாவை எதிர்க்கட்சிகள் இல்லாத மக்களவையில் மோடி அரசு நிறைவேற்றியது.
தி இந்து:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த நிலைப்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். அந்தர்பல்டி. இரு நாட்களுக்கு முன், எதிர்த்த நிலையில், தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டும், என மாற்றிப் பேச்சு.
* அரசியல் சாசனப் பதவிகளில் இருப்பவர்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்.
தி டெலிகிராப்:
* மேலும் மூன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக்கிற்கு எதிர்ப்புப் பேரணி நடத்தினர்.
* மணிப்பூர் வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் தகனம் செய்யப்பட் டார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். பாஜக ஆட்சியில் நாடாளுமன்றம், எல்லைகள், சமூகம் எதுவும் பாதுகாப்பாக இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
றீ சிறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மறுத்ததால், மூன்று வடமாநிலங்களை கட்சி இழந்தது என ராகுல் காந்தி அதிருப்தி.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment