திருவனந்தபுரம், டிச.22 சபரிமலை அய் யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இந்த நேரத்தில் நாடெங்கும் இருந்து லட்சக் கணக்கானோர் நோன்பிருந்து மலைக்கு வந்து அய்யப்பன் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகச் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை திறக் கப்பட்டது. கடந்த 28 நாள்களில் சபரி மலை கோவிலுக்கு ரூ.134.44 கோடி வரு வாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருகைதந்துள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் குறைந்து 18 லட்சம் பேர் வருகை தந் துள்ளதாக தேவசம்போர்டு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ‘டல்’லடிக்கிறது!
Leave a Comment