சென்னை, டிச.21– தென் மாவட் டங்களில் கனமழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 10 ஹெலிகாப் டர்கள் மூலம் 27 டன் உணவு வழங்கப்பட்டது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை, சேப்பாக்கம் எழி லகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து நேற்று (20.12.2023) ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத் தில் இருந்தபடி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி நிர்வாகதுறை ஆணை யர், மின்சாரம், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தென் மாவட்டங்களில் எடுக் கப்பட்ட நடவடிக்கைகள், தற் போதைய சூழல் குறித்தும் நிவா ரண பணிகள் குறித்தும் முதல மைச்சர் கேட்டறிந்தார்,
27 டன் உணவு
குடிநீர் வசதி, பால் வினியோகம், மின்சாரம் வழங்கப்பட்டுள்ள நிலை குறித்து ஆய்வு செய்தார். எட்டயபுரத்தில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் முதலமைச்சர் பேசினார்.
தொடர்ந்து அங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், சிறீவைகுண்டம் பகுதி யில் மீட்புப் பணிகள் நிலை குறித் தும் கேட்டறிந்தார். பாதிக்கப் பட்ட பகுதிகளில் 10 ஹெலிகாப் டர்கள் மூலம் மீட்புப் பணிகளுடன், பிற மாவட்டங்களில் தயாரித்து 27 டன் உணவுப் பொட் டலங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மின் வினி யோகம் வழங்க போர்க்கால அடிப் படையில் பணிகள் நடந்து வரு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலம் 27 டன் உணவு பொருட்கள் வழங்கல் : தலைமைச் செயலாளர் தகவல்
Leave a Comment