புதுடில்லி, டிச.21 நாடாளுமன்றத்தின் மக்கள வையில் கடந்த 13 ஆம் தேதி 2 பேர், பார்வை யாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ணப் புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட் டனர். இதுகுறித்து அவையில் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட் டனர். இதன் காரணமாக இரு அவைகளிலும் சேர்த்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நேற்று (20.12.2023) போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனிய காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். ‘ஜன நாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை களையும் அவர்கள் கைகளில் வைத்திருந்தனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கூறியதாவது:
நாடாளுமன்ற வரலாற்றில், இது நம்பகமற்ற செயல்.ஜனநாயகம் மீது விழுந்த அடி. நாடாளு மன்றத்தில் நம்பகத்தன்மையுடன் செயல்படு வது அமைச்சர்களின் மிக முக்கியமான பொறுப்பு.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு நிகழ்வு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளித் திருக்க வேண்டும். ஆனால், இதுகுறித்து விவா திக்க அரசு விரும்பவில்லை. அவர்கள் நினைத்தபடி செயல்பட ஆளும் கட்சியினர் விரும்புகின்றனர்.
இவ்வாறு சசிதரூர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,
‘‘எதிர்ப்புதெரிவிக்கும் அனைவரையும் இடைநீக்கம் செய்து சர்வாதிகாரத்துடன் செயல்பட ஆளும்கட்சியினர் விரும்புகின் றனர். ஜனநாயக நாட்டில் இது முடியாது. அதனால்தான் நாங்கள் மக்களிடம் செல்கி றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடை நீக்கம் ரத்துசெய்யப்பட்டு, அவையில் விளக் கம் அளிக்கும்வரை, எங்கள் போராட்டம் தொடரும். எனது கடிதத்துக்கு குடியரசுத் துணைத் தலைவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’’ என்றார்.
‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப் பினர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய தாவது:
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்து மீறல் நிகழ்வு குறித்து உயர்நிலை விசாரணை நடத்தும்படி உள்துறை செயலாளருக்கு மக்களவைத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப் படுத்த, மத்திய சிறப்புக் காவல் படை தலைமை இயக்குநர் மேற்பார்வையில் குழு அமைக்கப் பட்டுள்ளது என்றார்.