புதுடில்லி, டிச.19 நாடாளு மன்றத்தில் பாதுகாப்பு குறை பாடு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமித்ஷா விளக் கம் அளிக்க கோரியும், 14 நாடாளுமன்ற உறுப்பினர் கள் மீதான இடை நீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடு பட்டனர்.
இதையடுத்து, இரு அவை களிலும் நேற்று (18.12.2023) ஒரே நாளில் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மக்களவையில் நடந்த பாதுகாப்பு விதிமீறல் நிகழ்வு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3 நாட் களாக எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால், அவை நட வடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை மக்களவை தொடங் கியதும், ‘பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தர வேண்டும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அய்யுஎம்எல் கட்சிகளை சேர்ந்த 33 நாடா ளுமன்ற உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழு வதும் இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
அவை நடவடிக்கை களுக்கு இடையூறாக செயல் பட்டதாக திமுக உறுப்பினர் களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், காங்கிரஸ் உறுப் பினர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், விஜய் வசந்த், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற் றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 33 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மக்களவை நாடாளுமன்ற உறுப்பி னர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, அன்டோ ஆண் டனி, கே.முரளீதரன், கொடி குன்னர் சுரேஷ், அமர் சிங், ராஜ்மோகன் உன்னிதான், சு.திருநாவுக்கரசர், கவுரவ் கோகோய், விஜய்குமார் வசந்த், டாக்டர் கே.ஜெயக் குமார், அப்துல் காலிக் ஆகி யோரும், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கணேசன் செல்வம், அண்ணா துரை, டி.சுமதி, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், ராமலிங்கம் செல்லப்பெருமாள், டி.ஆர்.பாலு ஆகியோரும், திரிண மூல் காங்கிரஸ் உறுப்பி னர்கள் கல்யாண் பானர்ஜி, சவுகதா ராய், சதாப்திராய், அசித் குமார் மால், பிரதிமா மண்டல்,ககோலி கோஷ், சுனில் மண்டல், அய்யுஎம்எல் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்களான இ.டி.முகமது பஷீர், கனி கே.நவாஸ், ஆர் எஸ்பிஎம்.பி.யான என்.கே. பிரேமச்சந்திரன் ஆகியோ ரும் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் முழக்கம்
பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மாநிலங்கள வையில் எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், என்.ஆர்.இளங்கோ உள்ளிட் டோர் அமளியில் ஈடுபட் டனர். இதையடுத்து காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் உட்பட எதிர்க் கட்சிகளை சேர்ந்த 45 நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படு வதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து, மாநிலங் களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. மக்கள வையில் ஏற்கெனவே 14 நாடாளுமன்ற உறுப்பினர் கள், மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். என 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்று மட்டும்78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட் டனர்.