கள்ளக்குறிச்சி டிச.17- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகளை உடனடியாக பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். மேலும் ஒரு உள்ளூரையோர் தங்குவதற்கு சராசரியாக சிறார்களுக்கு 40 சதுர அடி மற்றும் மகளிர்க்கு 120 சதுர அடி இடத்தை ஒதுக்கீடு செய்வதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். குளியல் மற்றும் உடை மாற்றும் அறையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதி காப்பகங்களில் விடுதி காப்பாளர் பெண்ணாகவும் விடுதி பாதுகாவலர் ஆணாகவும் இருக்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர் காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு மற்றும் விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.