பெண்களின் மாதவிடாய் பிரச்சினை அமைச்சர் ஸ்மிருதி ரானி பேச்சுக்கு தேசிய மாதர் சங்கம் கண்டனம்

2 Min Read

சென்னை டிச 17 மாதவிடாய் காலங் களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, ஊதியத் துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர் பாக மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாத விடாய் சுழற்சி என்பது குறைபாடல்ல. அது இயல்பானதே. எனவே பெண் களுக்கு பணியிடங்களில் ஊதியத் துடன் கூடிய மாதவிடாய் விடு முறையை கட்டாயமாக்குவது தேவையற்றது” என்று கூறினார்.
இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்த நிலையில், இந்திய மாதர் தேசிய சம்மேளனமும் தங்களது கண் டனத்தை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத் தின் மாநில செயலாளர் மு.கண்ணகி வெளியிட்ட அறிக்கை: ஊதியத் துடன் கூடிய மாத விடாய் கால விடுப்பு மாணவர்கள், தொழிலா ளர்கள் என அனைத்து தரப்பினருக் கும் அத்தியாவசியமானது. உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக சோர்வையும் பலவீனத்தையும் ஏற்படுத்தக் கூடிய மாதவிடாய், இயற்கை உயிரியல் நிகழ்வு என்பது உண்மை தான். ஆனால் பெண்களின் ஹார்மோன்களின் சுரப்பு, உணவு முறைகள், ரத்த அணுக்களின் எண்ணிக்கை, உடல்வாகு போன்ற வற்றால் ஏற்படும் சீரற்ற மாத விடாயால், அதிக வலியுணர்வு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும். இத்தகைய உடலியல் சிரமங்களை தாங்கி பெண்கள் வேலை செய்ய வேண்டும் என்பது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
அய்ரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் இதற்கு ஒரு முன்னுதார ணமாக திகழ்ந்து, அதற்கான தனிச் சட்டங்களை இயற்றி 1947 முதல் நடைமுறைப் படுத்தி வருகிறது. கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் 3 முதல் 5 நாட்கள் வரைவிடுப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் கூட கேரளா, பீகார் மாநிலங்களிலும் மாதவிடாய் கால விடுப்பு நடைமுறையில் உள்ளது. பெண்கள் உயிருள்ள, உணர்வுள்ள, உரிமையுள்ள மனித குலத்தின் அடிப் படை சக்தி. இந்நாட்டில் பெண்களை அடிமையாக்கி வேலை செய்ய நிர் பந்திப்பதை ஏற்க முடியாது. ஒன்றிய அமைச்சர் மாதவிடாய் உடல் ஊன மாக கருதி விடுமுறை அவசியமில்லை என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேபோல மாத விடாய் நாட்களில் 3 முதல் 5 நாட்கள் விடுமுறையளிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *