சென்னை, டிச.17- இந்திய ஆட்டோ வாகன பொறி யாளர்கள் கழகம் மற்றும் மின்சாரம், மின்னணு பொறி யாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் பன்னாட்டு போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாட்டை நடத்தின.
இந்தியாவில் வாகன பொறியியல் வல்லுநர் களிடையே, சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்த துறையில் சமீபத்திய மாற்றங்கள் குறித்து ஒருவருக் கொருவர் விவாதிப் பதற்கான தளமாக இந்த மாநாடு அமைந்திருந்தது.
இந்திய வாகன சந்தை வேகமாக வளரும் என எதிர்பார்க்கப் படுவதாலும், தற்போது உலகின் 3ஆவது பெரிய சந்தையாக இருப்பதாலும் இந்த மாநாடு பெரும் முக்கியத்துவம் பெற்றது. இந்த மாநாட்டில் 16 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தரமான மின்சார வாகனங்களை தயாரித்தல், மின்வாகன தொழில்துறையினருக்கு ஏற்ற அரசின் கொள்கை, இந்தியாவில் கரியமில வாயுவை 2070க்குள் முற்றிலுமாக குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் வல்லுநர்கள் விவாதித்ததாக மாநாட்டின் தலைவர் என் பாலசுப்ரமணியன் கூறினார். வேகமான சார்ஜிங் நிலை யங்கள், மாற்றக்கூடிய பேட்டரி, அதன் எடையைக் குறைத்தல் தொடர்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தாக மாநாட்டு அமைப் பாளர் டாக்டர். ஷங்கர் வேணு கோபால் கூறினார்.