தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மிக்ஜாம் புயலால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான சைதை மண்டலம் மசூதி பள்ளம், திவான் பாஷ்யம் தெரு, வாணியர் தெரு, ஜெயராம் தெரு, கவரை தெரு, இளையாழ்வார் கோயில் தெரு, சுப்பிரமணிய சாலை, தாடி ரெத்தினம் தெரு, கம்பர் தெரு, பாலகிருஷ்ணா தெரு, சைதை சம்பந்தன் தெரு, நேரு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 6000 குடும்பங்களுக்கு நேற்று (14.12.2023) தலா 5 கிலோ அரிசி, போர்வை மற்றும் பிஸ்கட் ஆகிய நிவாரணப் பொருட்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். உடன் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தி.மு.கழக நிர்வாகிகள் உள்ளனர்.