செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

அனுமதி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நெறிமுறைகளை
இறுதி ஊர்வலங்களில் சாலையில் மலர் மாலைகளை வீசுவதையும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்து வதையும் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
குடும்பத்தினருடன்…
சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும், தவறை உணர்ந்து மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடு படாமல் தடுக்கவும் குடும்ப உறுப்பினர்களுடன் காணொலியில் பேசுவதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
கனமழை
தமிழ்நாட்டில் சில இடங்களில் வரும் 16, 17ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
கற்பித்தலில்…
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அர சுப் பள்ளிகளில் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களுக்கு, தனியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இணைய வழி தேர்வு நடந்தது. அதில் 8,096 பேர் பங்கேற்றனர்.
சேதம்
மிக்ஜாம் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிறுவனத் திற்கு ரூ.210 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிரந்தரப் பணியில்…
தரமான கல்வியை பெறும் உரிமையுள்ளதால், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கசிவை அகற்ற…
சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கசிவை விரைந்து அகற்றும் பணிகளை விரைவுப்படுத் திட சிபிசிஎல் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.
அகற்றம்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை மாநகர் முழுவதும் குப்பைகள் குவியல் குவியலாக குவிந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 57192.63 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *